அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் (உறையூர்)
God Name : மூலவர்: அழகிய மணவாளன்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
புத்திர பாக்கியம் வேண்டி நின்ற நந்த சோழ மன்னனின் மகளாக அவதரித்த திருமகள், கமலவல்லி எனும் பெயரில் வளர்ந்து வந்தாள். திருமண வயது வந்ததும் அவள் விரும்பியபடியே அரங்கநாதனுக்கு மணம் முடித்து வைத்தான் அரசன். சகல சீர் வரிசைகளுடன் ஸ்ரீரங்கம் சென்ற கமலவல்லி, ஆலய கர்ப்பக்ரஹத்துக்குள் பிரவேசித்ததும், அரங்கனின் திருமேனியுடன் ஐக்யமாகி விட்டாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
உறையூரில் ஒரு கோவிலை நிர்மாணித்து அதில் அரங்கனை அழகிய மணவாளனாக எழுந்தருளச் செய்தான் நந்த சோழ மன்னன் என ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.
திருப்பாணாழ்வார் நெற்கதிரிலே தோன்றி இங்கு வாழ்ந்து வந்த பாணர் ஒருவரால் வளர்க்கப்பட்டு வந்தார். பின்னர் அரங்கனால் ஆட்கொள்ளப்பட்டார் எனக் கூறுவர். திருப்பாணாழ்வார் அவதார ஸ்தலம்.
பெருமாள் வடக்கே திருமுக மண்டலம் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே திவ்ய தேசம் இதுதான் என்பர்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: அழகிய மணவாளன்் தாயார்: கமலவல்லி் உற்சவத் தாயார்: உறையூர் வல்லி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ அழகிய மணவாளன் நின்ற திருக்கோலத்தில், வடக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். வலது கரம் அபய பிரதானம் செய்து கொண்டிருக்க, இடது கரம் கதை ஏந்தியுள்ளது. மேற்கரங்களில் பிரயோக சக்கரமும், சங்கமும் கொண்டுள்ளார். இச்சந்நிதியில் உற்சவர் கிடையாது.
வலப்புறமாக கமலவல்லித் தாயார் இருந்த கோலத்தில் காட்சி தருகின்றார். வரத ஹஸ்தம் மற்றும் தாமரை மலர் கொண்ட திருக்கரங்கள். தனிக் கோவில் இல்லை.
உற்சவத் தாயாரான வாஸலட்சுமி நாச்சியார் எனப்படும் உறையூர் வல்லி நாச்சியாரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது.
பெருமாள் நின்று கொண்டும், தாயார் உட்கார்ந்து கொண்டும் சேவை சாதிப்பதை கல்யாண அவசர கோலம் என்பார்கள்.
பிரகார வலச்சுற்றில் ஆழ்வாராதிகளை சேவிக்கலாம். திருப்பாணாழ்வார் சந்நிதி திருக்குளத்திற்கு வடக்கே உள்ளது.
ஸ்ரீரங்கத்திலிருந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் உற்சவ ரங்கநாதர், பங்குனி மாத ஆயில்ய நட்சத்திர நாளில் கமலவல்லித் தாயாருடன் ஏகாசனத்தில் அமர்ந்த சேவை சாதிப்பார். (இரவு 11.00 மணி வரை) மாசி மாத தேய்பிறை ஏகாதசியன்று தாயார் சொர்க்க வாசல் கடக்கும் நிகழ்ச்சி இங்கு மட்டுமே நடைபெறுவதாக கூறுகின்றனர்.
ஆயில்ய நட்சத்திர நாளில் தாயாருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் திருமணத் தடை விலகும் என பட்டாச்சார்யார் தெரிவிக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.