அருள்மிகு கல்லுக்குழி ஆஞ்சநேயர் திருக்கோவில் (திருச்சிராப்பள்ளி)
God Name : ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
திருச்சி ஜங்ஷன் முதல் பிளாட்பாரத்தில் சிறிய கோவிலாக இருந்ததை, ப்ராட்கேஜ் விரிவாக்கப் பணி நடைபெறுகையில், தற்போதுள்ள இடத்தில் கோவிலுக்கு நிலம் ஒதுக்கி, பின்னர் இக்கோவிலைக் கட்டியதாக ஆலயக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது. ரயில்வே ஏஜண்ட் ஆர்ம்ஸ் பை நடந்து வரும்போது ஒரு மைல் ஸ்டோனில் கால் இடறி விழுந்து, அதனால் கோபங்கொண்டு, அதை பெயர்த்து வீசினாராம். மைல் ஸ்டோனில் ஆஞ்சநேயரின் திருவுருவம் புடைப்பு சிற்பமாக இருந்தது. அன்றிரவு அவருடைய கனவில் ஏராளமான வானரங்கள் வந்து பாடாய்படுத்தியதாம். பின்னர் அந்த அதிகாரி தன் தவறை உணர்ந்து, தன் செலவிலேயே இக்கோவிலைக் கட்டி தந்ததாக செவிவழிக் கதை ஒன்றும் உள்ளது. இந்த ஆஞ்சநேயரை ஆங்கிலேய அதிகாரிகளும் வழிபடுவார்கள் எனக் கூறுவர்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி வடக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பாரிஜாத மலரும் அபய ஹஸ்தமும் கொண்ட திருக்கரங்கள். இடது பாதம் வடக்கு நோக்கியும், வலது பாதம் கிழக்கு நோக்கியும், வால் தெற்கு பக்கமாக வளைந்தும் காணப்படும் அற்புதமான அழகிய திருமேனி. உற்சவ மூர்த்தி வெள்ளிக் கவச அலங்காரத்துடன் காட்சி தருகின்றார். விநாயகர், முருகன், நவக்கிரகங்கள் சந்நிதிகளும், பஜனை மடமும், தீர்த்தக் கிணறும் இருக்கின்றன. ராஜ கோபுரத்திலுள்ள தெய்வீக திருவுருவங்களின் சுதைச் சிற்பங்கள் பேரெழில் கொண்டவை. சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், பாண்டுரங்கன், பிள்ளையார், முருகன் என்ற வரிசையில் சேவிக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.