அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் (பாரியூர்)

God Name : கொண்டத்து காளியம்மன்

காளிகாம்பாள் கோவில்

நாகப்பட்டினம்

Call : +91-

ஏராளமான செல்வங்களுடன் வாழ்ந்து வந்த செல்வந்தர் ஒருவர், வந்து கேட்பவர்களுக்கு இல்லை எனக் கூறாமல் அள்;ளிக் கொடுத்து, செல்வங்களை எல்லாம் இழந்து ஏழையானார். இனி கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டபோது காளி தோன்றி பொற்காசுகளை மலை போல் வழங்கி அவரை மீண்டும் செல்வந்தராக்கினாள் என ஸ்தல வரலாறு. சூரராக சித்தர் அருள் பெற்ற ஸ்தலம். பாரி வள்ளல் வாழ்ந்த பறம்பு மலையருகே உள்ள கோவில்.பாரி வள்ளலின் குல தெய்வம்.
ஆலயத்தின் வடக்கு வாசலின் முன்பாக தடப்பள்ளி வாய்க்கால் எனும் குளிர்ந்த நீரோடை இருக்கின்றது. அருகே பெரியதோர் ஆலமரம். அதனுள் வளர்ந்த பனைமரத்தை ஆலுண்டபனை என்பர். கோவிலுக்குள் வன்னி விநாயகர், வரச்சித்தி விநாயகர், கல்யாண விநாயகர் என மூன்று விநாயகர்கள் எழுந்தருளி ஆசி தருகின்றனர். விவாக பிராப்தி அளிப்பவர் கல்யாண விநாயகர். வழவழப்பான கருங்கல்லால் உருவான பிரதான கருவறையில் மூலவராக கொண்டத்து காளியம்மன் எழுந்தருளி அருள் புரிகின்றார். சுவாலா மகுடம் தரித்து, ஆயுதங்கள் ஏந்திய அஷ்ட புஜங்களுடன் காட்சி தருகிறாள். சூலத்தால் அசுரனை குத்தியபடியும் காலால் மிதித்தபடியும் காட்சி தருகிறாள். குதிரை வாகனத்துடன் மகா முனீஸ்வரர், பூங்காளியம்மன், சப்த கன்னிகைகள் ஆகிய பரிவார தேவதைகளை தரிசிக்கலாம். ராஜகோபுரத்தை அடுத்துள்ள மண்டபத்தில் ஐம்பது அடி நீளமுள்ள கொண்டம் தீபஸ்தம்பம் உள்ளன. பூ மிதித்தல் விழாவிற்காக உருவாக்கிய குண்டம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.