அருள்மிகு சுவாமி ஐயப்பன் திருக்கோவில் (திருச்சிராப்பள்ளி)
God Name : சுவாமி ஐயப்பன்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
ஆலய வளாகத்தை மிகத் தூய்மையாக வைத்துள்ளனர். உழவாரப்பணி நடக்கின்றது. சேவார்த்திகள் குடிக்க துளசி கலந்த நீர் செப்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் அழகிய நந்தவனம் ஒன்றை அமைத்துள்ளனர். 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் சம்பந்தப்பட்ட மரங்களை நட்டுள்ளனர். அதில் 356 மூலிகைச் செடிகளும் 368 மரங்களும் வளர்க்கப்படுகின்றன. எட்டு வடிவ நடைமேடை ஒன்றும் அமைத்துள்ளனர். நாட்டின் பல முனைகளிலுள்ள நதிகள் மற்றும் ஆலயங்களிலிருந்து புனிதக் கற்கள் வரவழைக்கப்பட்டு ஒரே மேடையில் வைத்து மலர் வழிபாடு நடத்துகின்றனர். இறைவன் பெயரால் மட்டும் அர்ச்சனை செய்யப்படுகிறது. நியாயமான கோரிக்கைகள், வேண்டுதல்களை பக்தர்கள் எழுதி இறைவனிடம் சமர்ப்பிக்க ஒரு தபால் பெட்டியும் வைத்துள்ளனர். அறிவுரைகளை எழுதி கல்வெட்டுகளாக சுவற்றில் வைத்துள்ளனர். இங்கு உண்டியல் கிடையாது. தீபாராதனை தட்டில் தட்சிணை போட வேண்டாம் என்ற அறிவிப்பு உள்ளது. இருமுடி கட்டுதல், வித்யாரம்பம், மாதா - பிதா பாத பூஜை ஆகிய சேவைகளை செய்கின்றனர். புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை, ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி ஆகியன மேற்கொள்கின்றனர்.
மூலஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுவாமி ஐயப்பன் மிகுந்த வரப்பிரசாதி. தரிசிப்போரை தன் வசம் ஈர்க்கும் விக்ரகம். விளக்கொளியில் நெய் அபிஷேகத்தில் பிரகாசிக்கும் விக்ரகம். சபரிமலையில் காட்சி தரும் அதே தோற்றத்தில் இங்கும் எழுந்தருளியுள்ளார். கிழக்கு பார்த்த சந்நிதி. கன்னி மூலையில் கணபதி ஆசி வழங்குகிறார். இவரது சந்நிதியருகே சந்தனக் கல்லும் சந்தனக் கட்டையும் வைத்துள்ளனர். பக்தர்கள் தாங்களே இழைத்து இட்டுக்கொள்ளலாம். மணிமண்டபத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தில் அஷ்டதிக் பாலகர்களின் திருவுருவங்களும் சரவிளக்கும் காணப்படுகின்றன. ஸ்ரீ சக்தி விநாயகர், பகவதி அம்மன், நாகராஜு, நாகராணி, நவகிரகங்கள் ஆகிய திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. சக்தி விநாயகர் சந்நிதி கொண்டுள்ளார். அருகே ஸ்தல விருட்சமான அரசமரம் உள்ளது. தாயை நினைத்து வணங்க அம்மா சந்நிதி ஒன்றும் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.