அருள்மிகு ஸ்ரீ ஓடத்துறை லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் (திருச்சிராப்பள்ளி)
God Name : ஸ்ரீ ஆற்றழகிய சிங்கர் எனப்படும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
அரங்கநாதனை சேவிக்க, இப்பகுதியிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு ஓடத்தில் சென்று வருவது ஆதியில் பழக்கத்தில் இருந்தது. இதனால் இப்பகுதிக்கு ஓடத்துறை எனப் பெயர் வந்தது. திருவெறும்பூர் அருகேயுள்ள சோழமாதேவி எனும் ஊரைச் சேர்ந்தவர் நிலத்தை உழும்போது கிடைத்த விக்ரஹமே ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். வடகரையில் காட்டழகிய சிங்கர் கோவில் கொண்டுள்ளதால், தன்னை காவிரியின் தென்கரையில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்புமாறு, ஊர் பெரியவரின் கனவில் தோன்றி பெருமாளே தெரியப்படுத்தினார், என ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கர் எனப் போற்றப்படும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, செங்கோலோடு வீற்றிருந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். சுயம்பு மூர்த்தம். அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கும் மஹாலட்சுமி தாயார் வரப்பிரசாதி. ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்களுடன் உற்சவ மூர்த்தியாக சேவை சாதிக்கிறார் அழகிய மணவாளன். நரசிங்கப் பெருமானின் உற்சவ மூர்த்தம் கருட வாகன திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ நரசிம்மரின் திருவடியை ஒரு கரத்தில் தாங்கியபடியும், தாயாரின் திருவடியை மறுகரத்தில் தாங்கியும் காட்சி தருகிறார் பெரிய திருவடி. வடக்கில் ஸ்ரீ பிரஸன்ன ஆஞ்சநேயர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். நெற்றிக் கண்ணுடன் காணப்படும் உற்சவ ஆஞ்சநேயர் பேரெழில் கொண்டு தரிசனம் தருகின்றார். தாயாரிடம் வைக்கும் விண்ணப்பத்தை, தாயார் பெருமாளிடம் கூறி நிறைவேற்றி வைப்பதாக ஐதீகம். குறைந்தபட்சம் 12 பிரதட்சிணங்கள் செய்வது இங்கு சம்பிரதாயமாக உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.