அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் (திருச்சிராப்பள்ளி)
God Name : நாகநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
நாக இன மக்களால் உருவாக்கப்பட்டு சோழ மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்ட கோவில். நாக கன்னியர்கள், நாகலோகத்திலிருந்து இங்கு வந்து இவ்விறைவனை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு பூஜித்துள்ளனர்.
சாரமாமுனிவர் வழிபட்ட இறைவன்.
இங்கு தவமிருந்த மட்டுவார்குழலி இத்தலத்திலுள்ள சிவகெங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடி, இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு லிங்க மூர்த்தத்தை வழிபட்டாள் என ஸ்தல வரலாறு. மலைக்கோவில் அம்பிகை மட்டுவார்குழலி இங்கு தவமிருந்ததை, சித்திரைத் திருவிழாவின் 6ஆம் நாள், ஐதீகமாக நடத்திக் காட்டுகின்றனர்.
விஜயதசமியன்று மலைக்கோவில் சிராமலைநாதர் இங்கு வந்து அம்பு போட்டு விட்டு திரும்பி செல்வார்.
மூலவர்: நாகநாதர், அம்பாள்: ஆனந்தவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான நாகநாதசுவாமி. சுயம்பு லிங்க மூர்த்தம்.
நாக கன்னிகைகள் வழிபட்டதாலும், நாகங்களை ஆபரணங்களாக அணிந்துள்ளதாலும் இவருக்கு நாகநாதசுவாமி என்ற பெயர் வந்தது. கிழக்கு பார்த்த சந்நிதி.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஆனந்தவல்லி எழுந்தருளி தரிசனம் தருகின்றார். சௌந்தர்யநாயகி என்ற பெயரும் உண்டு. அம்மன் சந்நிதி எதிரே அழகிய திருக்குளம்.
ஒரே இடத்தில் நின்று கொண்டு சுவாமியையும் அம்பாளையும் தரிசிக்கும் விதத்தில் அமைந்துள்ள சந்நிதிகள். கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றனர்.
பிரகார வலச்சுற்றில் - பிள்ளையார், முருகன், தண்டாயுதபாணி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனர், மோகினி ஆகிய உலாத் திருமேனிகள் அழகாக உள்ளன. சப்தரிஷிகள், நால்வர் திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.