அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில் (திருச்சிராப்பள்ளி)
God Name : மாணிக்க விநாயகர் (அடிவாரம்) மற்றும் உச்சிப் பிள்ளையார் (மலை மேல்)
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
ஸ்தல வரலாறு - உச்சி பிள்ளையார் கோவில்
ராவண சம்ஹாரத்திற்கு உதவியாக இருந்தவர்களுக்கு - தமது அன்பையும், பாராட்டுதல்களையும், பரிசுகளையும் தந்து கொண்டிருந்த ஸ்ரீ ராமர், தமது வம்சாவளியினர் வழிவழியாக வழிபட்டு வந்த தமது குலதெய்வமான ஸ்ரீ ரங்கநாதர் விக்ரகத்தை விபீஷணனுக்கு கொடுத்தார்.
இலங்கை செல்லும் வரை வழியில் எங்கும் கீழே வைக்கலாகாது என நிபந்தனை விதித்திருந்தார். அப்படி வைக்க நேர்ந்தால், வைத்த இடத்திலேயே பிரதிஷ்டை ஆகிவிடும் என எச்சரித்திருந்தார்.
விக்ரகத்துடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன், வெகு தூர பயணத்திற்குப் பின், இவ்வூருக்கு அருகில் காவிரி பிரவாகமாக ஓடுவதைக் கண்டதும், அதில் குளிக்க ஆசைப்பட்டான். அவனுக்கு அந்த ஆசையை உண்டாக்கிய விநாயகர், ஒரு பாலகன் வடிவில் எதிரில் போய்க் கொண்டிருந்தார். சிறுவனை அழைத்த விபீஷணன் தான் குளித்து விட்டு வரும் வரை விக்ரகத்தை கையில் வைத்திருக்குமாறும், தரையில் வைக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டான்.
சம்மதித்த சிறுவன் பாரம் தாங்க முடியாத நிலை ஏற்பட்டால், மூன்று முறை கூப்பிடுவேன், நீங்கள் வந்து வாங்கிக் கொள்ளவில்லை என்றால், தரையில் வைத்து விடுவேன் என்ற நிபந்தனையுடன் விக்ரகத்தைப் பெற்றுக் கொண்டான்.
காவிரிக் குளியலின் ஆனந்தத்தில் மூழ்கியிருந்த விபீஷணனுக்கு திடீரென சிறுவனின் நிபந்தனை ஞாபகத்திற்கு வரவே அவசர அவசரமாக கரைக்கு வந்தான். அங்கே விக்ரகம் தரையில் வைக்கப்பட்டு இருந்தது. நான் மூன்று முறை அழைத்தேன் நீங்கள் வரவில்லை, பாரம் தாங்க முடியாததால், கீழே வைத்து விட்டேன் எனக் கூறி சிறுவன் மலையுச்சிக்கு ஓட்டம் பிடித்தான்.
தரையில் வைக்கப்பட்ட விக்ரகம் நிலை கொண்டு விட்டது. விபீஷணன் எவ்வளவோ முயன்றும், அதை அசைக்கக் கூட முடியவில்லை. எம்பெருமான் அங்கேயே சயனித்து விட்டார். இதனால் கோபம் கொண்ட விபீஷணன், சிறுவனை துரத்திக் கொண்டு மலைக்கோட்டை உச்சி வரை வந்து, சிறுவனைப் பிடித்து, அவனது தலையில் குட்டி விட்டான். அடுத்தகணம், சிறுவன் விநாயகராக மாறி விபீஷணனுக்கு ஆசி வழங்கினார். விபீஷணன் குட்டியதால் ஏற்பட்ட வடு இன்றளவும் பிள்ளையார் தலையில் உள்ளது.
இங்கிருந்தபடியே இலங்கையை பார்த்து அனுக்கிரகம் செய்யும் விதத்தில் தென் திசை நோக்கியே விக்ரகத்தை வைத்துள்ளதாகவும், அவர் கோவில் கொண்ட இடம் ஸ்ரீரங்கம் எனப்படும் என்றும் கூறி விநாயகர் மறைந்தார் என ஸ்தல வரலாறு.
2500 வருடங்கள் பழமையானதும், 273 அடி உயரம் கொண்டுள்ளதுமான, மலைக்கோட்டை கோவில்கள் மூன்று நிலைகளாக உள்ளது.
முதல் நிலை: மலையடிவாரம் - மாணிக்க விநாயகர் சந்நிதி
இரண்டாம் நிலை: ஸ்ரீ தாயுமானஸ்வாமி கோவில் - அடிவாரத்திலிருந்து 178 படிகள் ஏற வேண்டும்.
(விவரங்கள் தேவாரத்திருத்தல வரிசையில் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது)
மூன்றாம் நிலை: உச்சிப்பிள்ளையார் கோவில் மற்றும் குடைவரைக் கோவில்கள்
தாயுமானவஸ்வாமி கோவிலிலிருந்து 239 படிகள் ஏற வேண்டும். அடிவாரத்திலிருந்து 417 படிகள் ஏற வேண்டும்.
அருள்மிகு மாணிக்க விநாயகர் திருக் கோவில் - மலையடிவாரம் (திருச்சிராப்பள்ளி)
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மாணிக்க விநாயகரின் அழகான திருவுருவம் கண்களையும் மனதையும் விட்டு அகலாது. குறுஞ்சிரிப்புடன் தரிசனம் தருகிறார். மலர் அலங்காரம், வெள்ளிக் கவசம், சந்தனக் காப்பு என்று விதவிதமான அலங்காரங்களில் காட்சி தருகிறார்.
மலையேறிச் செல்ல முடியாதவர்களுக்காக இங்கு அமர்ந்து ஆசி வழங்குகிறார் எனக் கூறுவர்.
தெப்பக்குளம்:
குமரவேளும் குளம் வெட்ட, பிள்ளையார் படிக்கட்டுக்கள் அமைக்க, ரங்கநாதர் சங்கு கொண்டு காவிரி நீர் நிரப்பி உருவாக்கிய குளம் என்று கூறுகின்றனர்.
தெப்பக்குளத்தருகே நந்தியம்பெருமான் எழுந்தருளியுள்ளார். இங்கு கோவில் கொண்டுள்ள பாதாள ஐயனார் பிரசித்தி பெற்றவர்.
அருள்மிகு உச்சி பிள்ளையார் திருக் கோவில் (திருச்சிராப்பள்ளி)
தாயுமானவர் கோவிலிலிருந்து 239 படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும். அடிவாரத்திலிருந்து 417 படிகள் கடந்து மேலே செல்ல வேண்டும்.
உச்சிமலையில் அமைந்துள்ள மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள உச்சிப் பிள்ளையார் மிகுந்த வரப்பிரசாதி. அழகான திருமேனி. விபீஷணன் குட்டியதால் ஏற்பட்ட வடு தலையில் காணப்படுகிறது.
உச்சிப்பிள்ளையார் கோவில் பிரகார மண்டபத்திலிருந்து, திருச்சி, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், காவிரி, கொள்ளிடம் ஆகிய இடங்களை கண்டு மகிழலாம்.
உச்சிப் பிள்ளையார் கோவிலிலிருந்து கீழே பார்த்தால் மலையின் தோற்றமும் படிக்கட்டுக்களும், பிள்ளையாரின் தும்பிக்கை போல் தெரியும் என்பர்.
உச்சிப் பிள்ளையார் கோவில் செல்லும் வழியில் உள்ள குடைவரைக் கோவிலில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் அனைத்தும் அற்புதமானவை.
குறிப்பாக கங்காள மூர்த்தியின் சிற்பம் எழிலானது. பிரவேசிக்கவிருக்கும் கங்கையைத் தாங்க சிரசில் ஜடாமகுடமும், ஒரு கரத்தில் ருத்ராட்ச மாலை ஏந்தியும், பூணூலாக அணிந்திருக்கும் நாகத்தின் தலையைப் பிடித்தபடி மற்றொரு கரமும் கொண்டு, முயலகன் மீது வைத்த காலுடன், அற்புதமான கோலத்தில் தரிசனம் தருகிறார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.