அருள்மிகு மதுரைக் காளியம்மன் திருக்கோவில் (தொட்டியம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
இவ்வூர் குதிரை லாயத்தில் பணிபுரியும் சின்னான் என்பவன், மதுரைக்குச் சென்று காளி கோவில் திருவிழாவில் பறை (மேளம்) கொட்டுவது வழக்கம். ஒரு சமயம் அவன் பறை கொட்டிக்கொண்டிருக்கும்போது, அதன் லயத்தில் மயங்கிய காளி அவனைப் பின்தொடர்ந்து இவ்வூருக்கு வந்து சேர்ந்தாள். வன்னி மரத்தடியில் புற்றுருவாக அமர்ந்தாள். மதுரையிலிருந்து வந்ததால் மதுரைக்காளி எனப் பெயர் கொண்டாள். சுற்றுவட்டாரத்து மக்கள் திரளாகக் கூடி வந்து வழிபடுகின்றனர்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மதுரைக் காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவ்வூரின் காவல் தெய்வமாக ஆட்சி செலுத்துகிறாள். மதுரை வீரன் மற்றும் கருப்பண்ணசுவாமியும் இங்கு கோவில் கொண்டுள்ளனர். பலிபீடத்தருகே வெண்குதிரை வாகனம் காணப்படுகிறது. 27 தூண்களை உடைய மண்டபமும், 5 தூண்களைக் கொண்ட அர்த்த மண்டபமும் இங்கு உள்ளன. தொட்டியத்திற்கு மேற்கே, திருநாராயணபுரம் சாலையில் உள்ள அரசூரில் தாயுமானசுவாமி கோவில் உள்ளது. இதில் சுகந்த குந்தளாம்பிகை உடனாய தாயுமானவர் எழுந்தருளியுள்ளார். அருகேயுள்ள மற்றொரு கோவிலில் திரிபுரசுந்தரி உடனாய அனலாடீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.