அருள்மிகு வேதநாராயணன் திருக் கோவில் (திருநாராயணபுரம்)
God Name : வேத நாராயணப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
நரசிங்கப் பெருமான் சாந்தமாக காட்சி தர வேண்டுமென பிரார்த்தித்த பிரஹ்லாதனனின் வேண்டுகோளுக்கிணங்க, திருநாராயணபுரம் வந்து தவம் செய்த பிரஹ்லாதனுக்கு பிரத்யட்சமானதாக ஐதீகம். இத்தலத்திற்கு பிரஹ்லாத க்ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு.
சிலர் இக்கோவிலுக்கு தீயிட்டபோது, திருநரையூர் அரையர் தன் குடும்பத்தோடு உயிர் நீத்து இப்பெருமாளை காத்ததாக கூறப்படுகிறது.
மூலவர்: வேத நாராயணன், தாயார்: வேதவல்லி.
மூலஸ்தானத்தில் வேத நாராயணப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, புஜங்க சயனமாக ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார். தலையணையின் கீழ் நான்கு வேதங்களும் வடிக்கப்பட்டுள்ளன. பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்யும் கோலம். திருவடியருகே மூன்று வயது பாலகனாக பிரஹ்லாதன் காணப்படுகிறான்.
ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் அமர்ந்துள்ளனர்.
ஆதிசேஷனும் அவரது மனைவியுமாக சேர்ந்து பைந்நாகப் பாயாக செயல்படுவதால் இங்கு பத்து தலைகளைக் காணலாம். வேறு எங்கும் காண முடியாத வித்தியாசமான கோலம். ஆதிசேஷனின் முகம் சுதையாலானது. இவர்களை தரிசிப்பவர்கள் நாக தோஷம் மற்றும் களத்ர தோஷங்களிலிருந்து விடுபடுவர்.
வேதவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். சரஸ்வதிக்கும் சந்நிதி இருக்கின்றது. உற்சவமூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. ஆண்டாள், ஆழ்வாராதிகள், மணவாள மாமுனி மற்றும் ராமாநுஜர் ஆகியோரை சேவிக்கலாம்.
இங்குள்ள தூண் ஒன்றில் ஆஞ்சநேயர் அழகுற எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.