அருள்மிகு ஸ்ரீ கல்யாண ப்ரஸன்ன வெங்கடாஜலபதி திருக் கோவில் (பெருமாள் மலை)

God Name : ஸ்ரீ கல்யாண ப்ரஸன்ன வெங்கடாஜலபதி

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

சோழ மன்னன் ஒருவன் இந்த மலை மீதுள்ள இலந்தை மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தான். பிரத்யட்சமான பெருமாளிடம் தனக்கு சேவை சாதித்தது போலவே, இங்கேயே கோவில் கொண்டு அனைவர்க்கும் கல்யாண கோலத்தில் சேவை சாதிக்க வேண்டும் என வேண்டினான். அவன் கோரியபடியே இங்கு எழுந்தருளி சேவை சாதிப்பதாக ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாயிருக்கும். பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மலையடிவாரத்தில் கோவிந்தராஜப் பெருமாள் கோவிலும் இருக்கின்றது. பேருந்து நிறுத்தம் அருகே அகஸ்தீஸ்வரசுவாமி மடம் இருக்கின்றது.
960 அடி உயரமுள்ள பச்சைமலை. மேலே ஏறிச் செல்ல 1532 படிகள் உள்ளன. வாகனங்களில் மலை ஏற வசதியாக மலைப்பாதையும் (5 கி.மீ) போடப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் பெருமாளின் திருவடிகளையும் கருடாழ்வாரையும் சேவிக்கலாம். மலைமேல் கோவில் மூலஸ்தானத்தில் ஸ்ரீ கல்யாண ப்ரஸன்ன வெங்கடாஜலபதி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். பெருமாள் சந்நிதியின் வலப்புறமாக அலர்மேல் மங்காத் தாயாரும், இடப்புறமாக பத்மாவதித் தாயாரும் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். பெருமாள் சந்நிதிக்கும் அலர்மேல் மங்கா சந்நிதிக்கும் இடையே கருப்பண்ணசுவாமி சந்நிதி கொண்டுள்ளார். இவரே க்ஷேத்ர பாலகர் என்பர். வைணவ - சைவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இத்தலத்தில் பெருமாள் சந்நிதியில் துளசியும், கருப்பண்ணசுவாமி சந்நிதியில் விபூதியும் கொடுக்கின்றனர். சோபன மண்டபத்தில் இசைத் தூண்களும், தசாவதார சிற்பங்களும், சதுர்புஜ கோதண்டராமர், ஹிரண்ய சம்ஹார நரசிம்மர் ஆகிய திருமால் வடிவங்களும் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.