அருள்மிகு கோலோச்சும் முருகன் திருக்கோயில் (துறையூர்)
God Name : முருகப் பெருமான்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
மூலஸ்தானத்தில் கோலோச்சும் முருகப் பெருமான் எழுந்தருளி அருள் புரிகின்றார். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. இரண்டு பக்கங்களிலும் சூரியனும் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி உள்ளனர். சக்தி சூரியன் என்ற பெயரில் சூரியனும், பக்தி சண்டிகேஸ்வரர் என்ற பெயரில் சண்டிகேஸ்வரரும் தரிசனம் தருகின்றனர். கருவறையைச் சுற்றிலும் முருகப் பெருமானின் அறுபடைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வலம்புரி விநாயகர், பார்வதி-பரமேஸ்வரன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். க்ஷேத்ர சனி பகவான் கையில் ருத்ராட்சம் ஏந்தி சாந்த ஸ்வரூபியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். சூர சம்ஹார விழாவில் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்போது மூலவர்க்கே வியர்வை துளிகள் அரும்புவது விசேஷமானது. கந்த சஷ்டியன்று பாலபிஷேகம் முடிந்து, அதை சேகரித்து காய்ச்சி, கற்கண்டு - குங்குமப்பூ கலந்து பிரசாதமாக தருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.