அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோவில் (துறையூர்)

God Name : நந்தீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

பராசுரன் எனும் அசுரன் இத்தலத்தில் நந்தியையும் சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான். தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகளையெல்லாம் இம்சிக்கும் பழக்கம் உள்ளவன். திருமால் கதாயுதம் ஒன்றைப் பெற்று அவனை அழித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. வில்வ மரத்தடியில் புதையுண்டிருந்த சிவலிங்கத்தை இவ்வூர் அரசன் வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினான் என ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.
மூலவர்: நந்தீஸ்வரர்் அம்பாள்: நல்லநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் நந்தீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். பெரிய அழகிய திருமேனி. இவருக்கு திருச்சிற்றம்பலமுடைய நாயனார் மற்றும் உலகு உய்ய வந்த சோளீஸ்வரமுடைய நாயனார் ஆகிய திருநாமங்கள் இருப்பதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. அம்பாள் நல்லநாயகி சதுர்புஜங்களும், ஜடாமகுடமும் கொண்ட அழகான திருவுருவம். ஷோடஸ கௌரிகளுள் மஹா சம்பத் கௌரி ஆவாள். கேட்டதெல்லாம் தரும் வரப்பிரசாதி. விநாயகர், சுப்ரமண்யர், ராமநாதர், வேணுபுரீஸ்வரர் சந்நிதிகள் இருக்கின்றன. இங்குள்ள நாக கன்னிகை இடுப்புப் பகுதியின் கீழ் பாம்பு வடிவமாகவும், இடுப்புக்கு மேல் கன்னியாகவும் தரிசனம் தருகின்றாள். பால் அபிஷேகம் செய்தால் நீல நிறமாக மாறுவதாக கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை தின ராகு கால வேளைகளில் விசேஷ ஆராதனை செய்கின்றனர். திருமணத்தடை விலக, நாகதோஷம் நீங்க நாக கன்னிகையை பிரார்த்திக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.