அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (குணசீலம்)

God Name : மூலவர்: பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், உற்சவர்: ஸ்ரீநிவாசர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

தால்பிய முனிவரின் சீடரான குணசீலர், சகல வேத சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்து, பின் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். திருமலையில் திருவேங்கடவனை தரிசித்து, உள்ளத்தைப் பறிகொடுத்த குணசீலர், வேங்கடவனை தரிசிக்காது இனி இருக்க முடியாது என எண்ணம் கொண்டார். பின்னர் அகண்ட காவிரிக்கரையை அடைந்து தமது ஆஸ்ரமத்தில் பஞ்சாக்னி வளர்த்து கடுந்தவம் மேற்கொண்டார். புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று சிரவண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், திருமால் பிரசன்ன வெங்கடாஜலபதியாகப் பிரத்யட்சமானார். திவ்ய மங்கள ஸ்வரூபனாய்க் காட்சி தந்தவரிடம் இத்தலத்திலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் எனப் பிரார்த்தித்தார் குணசீல முனிவர். அவரது வேண்டுகோளை ஏற்று பெருமாள் இங்கு எழுந்தருளி சேவார்த்திகளுக்கு சேவை சாதிக்கின்றார். குணசீலர் தவம் மேற்கொண்ட ஸ்தலம் என்பதாலும், அவருக்காகப் பெருமாள் பிரசன்னமான ஸ்தலம் என்பதாலும் இப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது. பெருமாளுக்குத் திருவாராதனங்கள் செய்து கொண்டிருந்த குணசீலரை, அவரது குருவான தால்பியர் தம்முடன் நைமிசாரண்யம் வரும்படி அழைக்கின்றார். பிரசன்ன வெங்கடேசரைப் பிரிய மனமில்லாமலும், குருநாதர் கட்டளையைத் தட்ட முடியாமலும் குழம்பிப் போன முனிவர் பெருமாளிடமே கேட்கிறார். உத்தரவு கிடைத்தது. சிஷ்யன் ஒருவனைத் திருவாராதனம் செய்யும்படி பணித்துவிட்டு நைமிசாரண்யம் செல்கிறார் குணசீலர். அடிக்கடி காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதனால், சிஷ்யன் திருவாராதனம் செய்வதை நிறுத்திவிட்டுப் போய் விடுகிறான். அர்ச்சாவதார மூர்த்தியாக இருந்த எம்பெருமான் தன்னைப் புற்றால் மறைத்துக் கொண்டார். சிறிது காலம் கழித்து அருகேயுள்ள ஊர் ஒன்றில் பசுக்களை மேய்த்துவிட்டு, பால் கறந்து குடங்களில் நிரப்பி எடுத்து வரும் வேலைகளைச் செய்து கொண்டிருந்த இடையர்கள், பால் தானாகவே குடங்களிலிருந்து மறைவதைக் கண்ணுற்றும், அசரீரியாக வந்த அருள் வாக்கின்படியும் எம்பெருமான் புற்றில் இருப்பதை அறிந்து கொண்டும், நடந்தவைகளை அரசருக்குத் தெரியப்படுத்தினார்கள். புற்று இருக்குமிடம் வந்த அரசன், எம்பெருமான் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து இவ்வாலயத்தை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோத்ஸவத்தின்போது குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும். சித்ரா பௌர்ணமி தெப்போத்ஸவம் சிறப்பாக நடைபெறும். மாதாந்திர திருவோண நட்சத்திர நாளில் சுவாமி கருடசேவை சாதிக்கின்றார். அபிமான ஸ்தலம்.
மூலவர்: பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், உற்சவர்: ஸ்ரீநிவாசர், உற்சவத் தாயார்கள்: ஸ்ரீ தேவி - பூதேவி. மூலஸ்தானத்தில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சுயம்பு மூர்த்தியாகப் பிரசன்னமானதால் பிரசன்ன வேங்கடபதி என்ற திருநாமம் கொண்டார். மூலவருக்கு தினமும் திருமஞ்சனம் செய்கிறார்கள். சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சந்நிதி கிடையாது. உற்சவரான ஸ்ரீநிவாசப் பெருமாள் சாளக்கிராம மாலை அணிந்து தங்கச் செங்கோலுடன் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தாயார்கள் உடன் உள்ளனர். சுவாமி சந்நிதி கோஷ்டத்தில் நவநீத கிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர் ஆகிய திருவுருவங்களைச் சேவிக்கலாம். உள் பிரகாரங்களில் ஸ்தல வரலாற்றை விளக்கும் ஓவியங்கள் உள்ளன. வைகானஸ ஆகமத்தைத் தோற்றுவித்த விகனஸருக்கும் ஆழ்வார்களுக்கும் சந்நிதிகள் உள்ளன. கொடிமரத்தைச் சுற்றிலும் உள்ள கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணன் ஆகியோரைச் சேவிக்கலாம். தீப ஸ்தம்பத்தின் முகப்பில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக உள்ளார். கோவிலையொட்டி காவிரியும், எதிரே பாபநாச தீர்த்தமும் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.