அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோவில் (திரு ஈங்கோய் மலை)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
ஈங்கோய் மலைச் சாரலில், மத்ய அகண்ட காவிரிக் கரையில் அமைந்துள்ள எளிமையான ஆஸ்ரமம்.
லோபமுத்ராவுடன் தென்னகம் வந்த அகஸ்தியர், இங்கு சுயம்புவான ஆதி பீடம் இருப்பதை உணர்ந்து, அன்னையின் வழிபாட்டு முறையை வகுத்தார்.
மஹாமேரு மண்டபத்தின் எதிரே ஊஞ்சலில் அமர்ந்து அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை மிகுந்த வரப்பிரசாதி. மஹாமேருவின் பின்புறமாக ஸ்ரீ லலிதாம்பிகையின் பஞ்சலோக விக்ரஹமும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
தியான மண்டபத்தில் 51 அட்சரங்களுக்குரிய சக்தி பீடங்களை எழுதி வைத்துள்ளனர். பின்புறமுள்ள யாகசாலையில் ஹோமங்கள் செய்து வருகின்றனர்.
'ளம்' எனும் லலிதாம்பிகைக்குரிய அக்ஷரம் நிலை கொண்டதால், அட்சர பீடம் எனும் ஆதி பீடமாகவும், அன்னையின் ஜோதியின் சாயை (நிழல்) விழுந்த இடமாதலால் சாயா பீடமாகவும் போற்றுகின்றனர். சக்தி பீடம் (50வது) இரண்டு பீடங்களின் பெயர்களைக் கொண்டுள்ளதாக விவரிக்கின்றனர்.
அகஸ்தியர் உருவாக்கிய பீடம் காலப்போக்கில் மறைந்ததால், அத்வையானந்தா ஸ்வாமிகள் இங்கு மஹாமேருவையும், லலிதாம்பிகையையும் ஸ்தாபித்ததாகக் கூறப்படுகிறது.
பெண்களே பூஜை வழிபாடுகள் செய்யும் இந்த ஆஸ்ரமத்தின் தலைவியாக ஸ்ரீ வித்யாம்பா சரஸ்வதியும், செயலராக யோகினி ஜெயாம்பா சரஸ்வதியும் உள்ளனர். முழுக்க முழுக்க யோகினிகளால் நடத்தப்படும் ஆஸ்ரமம்.
நித்ய பூஜைகள், அலங்காரங்கள், ஹோமங்கள் அனைத்தும் சிறப்புற நடத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.