அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோவில் (திரு ஈங்கோய் மலை)
God Name : மரகதாசலேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
அகஸ்தியர் இத்தலம் வந்தபோது, ஏராளமான கூட்டம் இறைவனை தரிசிக்க காத்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போக முடியாததால், அகஸ்தியர் ஈ வடிவம் கொண்டு உள்ளே சென்று இறைவனை தரிசித்து ஆனந்தம் அடைந்தார். இதனால் இத்தலம் ஈங்கோய் மலை என்ற பெயரைக் கொண்டது.
இத்தலத்தில் திரிந்து கொண்டிருந்த குரங்கு ஒன்று, தன் இஷ்டத்திற்கு சேட்டைகளை செய்து கொண்டு ஒரு தேன் கூட்டை பிய்த்து எறிந்தது. தேனீக்களிடம் கடிபட்டும் விடாமல் தேனடையை தூக்கிக் கொண்டு ஓடியது. அதிலிருந்து சிந்திய தேன் சிவலிங்கத்தின் மீது விழுந்தது.
சிவபெருமானுக்கு தேனபிஷேகம் செய்த பலனைப் பெற்ற குரங்கு, மறு பிறவியில் மகத தேச மன்னன் சுப்பிரபனாக ஜனித்தது. மன்னன் சுப்பிரபன் சுவாமிக்கு தினமும் இரண்டு வேளை தேனபிஷேகம் செய்து வந்தான். ஒரு நாள் இறைவன் அவனை சோதிக்க எண்ணியதால் தேன் கிடைக்காமல் போனது. தேனபிஷேகம் செய்ய முடியாமல் போனதால் வருத்தமுற்ற சுப்பிரபன் தனது காதை அறுத்துக் கொள்ள முற்பட்டான். அங்கு பிரத்யட்சமான இறைவன் அச்செயலைத் தடுத்து அவனை ஆட்கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இரட்டை மலை, மரகத மலை, சிவசக்தி மலை என்றெல்லாம் போற்றப்படும் அருகேயுள்ள வாட்போக்கி மலை கடம்பந்துறையைப் பார்க்கிறது. கடம்பந்துறை மலை பார்க்கிறது. மூன்று மலைகளுமாக சேர்ந்து சோமாஸ்கந்த வடிவம் கொண்டுள்ளது.
காவிரியின் தென்கரையில் உள்ள கடம்பந்துறையில் கடம்பர் கோவில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் காலைக் கடம்பர். அருகேயுள்ள வாட்போக்கி மலையில் இருப்பவர் மத்தியான சொக்கர்.
நக்கீரர் பாடிய பதிகங்கள்.
அம்பிகை வழிபட்டதால் சிவசக்திமலை என்ற பெயர் கொண்டது.
தேவாரத்திருத்தலம்.
மூலவர்: மரகதாசலேஸ்வரர், அம்பாள்: மரகதவல்லி.
அகண்ட காவிரியின் அக்கரையில் உள்ளது மரகத மலை. பரிசலில் ஆற்றைக் கடந்து செல்வர். மலை ஏறுவதற்கு ஏதுவாக 500 படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மரகதாசலேஸ்வரர். பச்சை பசேலென்ற மரகதக்கல் கொண்டு உருவான திருமேனி. ஒளி வீசும் அழகான தேஜோமய லிங்கம். கற்பூர ஆரத்தியில் சுற்றிலும் பச்சை நிற ஒளி பரவுகிறது. சிவராத்திரி சமயம் மூன்று நாட்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. திருவீங்கோயுடையார் என்ற திருநாமம் இருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. அம்பாள் மரகதவல்லி அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. மகாமண்டபத்தில் சைவக் குரவர்களின் கல் படிமங்கள் உள்ளன.
ஈங்கோய் மலை மரகதாசலேஸ்வரரை மாலை வேளையில் தரிசிப்பது சிறந்தது.
மலையடிவாரத்தில் போக முனிவர் கோவிலும், லலிதாம்பிகை கோவிலும் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.