அருள்மிகு ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் (திருத்தலையூர்)
God Name : ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
கைலாசத்தை உலுக்கியதால் சிவபெருமானின் கோபத்திற்காளான ராவணன் இத்தலத்திற்கு வந்து சாம கானம் பாடி, இசையால் குடமாக்கி, நரம்புகளை தந்திகளாக்கி சாமகானம் இசைத்து வழிபட்டான். இதனால் இவ்வூர் 'திருகு தலையூர்' எனப் பெயர் கொண்டு நாளடைவில் மருவி 'திருத்தலையூர்' என்றானது.
இங்கு ஏற்கனவே தவம் மேற்கொண்டிருந்த சப்த ரிஷிகள், திடீரென ராவணன் இங்கு வந்தது கண்டு, பயம் கொண்டு தங்களைக் காத்துக் கொள்ள சிவபெருமானை வேண்டி மருத மரமாக மாறி நின்றனர். இங்கு ஸ்தல விருட்ச பூஜை விசேஷம் என்பர்.
துளசி செடியை தலைகீழாகப் பிடித்துக் கொண்டு கிழவன் தோற்றத்தில் காணப்பட்ட திருமால், ராவணனிடம் "உன்னுடைய ஆயுள்காலமான மூன்றரைக் கோடி ஆண்டில் நீ ஏற்கனவே வரமாகப் பெற்றது மூன்று கோடி ஆண்டுகளே. மீதமுள்ள அரை கோடி ஆண்டை சிவனாரிடமிருந்து வரமாகப் பெற்று வா" என்றார். ராவணனும் கடுந்தவம் மேற்கொண்டான்.
பிரத்யட்சமான சிவபெருமானிடம் தனக்கு அரைக் கோடி ஆண்டு ஆயுள் வேண்டும் எனக் தவறுதலாகக் கேட்டு வரமாகப் பெற்றான். இதனால் ஏற்கனவே வரமாகப் பெற்றிருந்த மூன்று கோடி ஆண்டுகளை இழந்தான்.
இதைக் குறிக்கும் விதமாக இத்தலத்தில் திருமால் மூன்று விரல்களை மடக்கியபடி காட்சி தருகிறார்.
மூலவர்: ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர். அம்பாள்: குங்குமவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அழகான பெரிய திருமேனி. சுயம்பு லிங்க மூர்த்தம். அத்ரி, ப்ருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கௌதமர், மரிசி, ஆங்கிரஸர் ஆகிய ஏழு ரிஷிகள் வழிபட்ட இறைவன் என்பதால் சப்தரிஷீஸ்வரர் என்றானார்.
அம்பாள் குங்குமவல்லி தனி சந்நிதி கொண்டுள்ளார். ராவணனே பிரதிஷ்டை செய்த ராவணேஸ்வர லிங்கம் தனி சந்நிதி கொண்டுள்ளது.
வீரபத்ரர் தனது அவதாரத்தின் மூலமாக அவரது முழு பராக்கிரமத்தையும் தந்தருளும் ஸ்தலம் இது. புரூரவ சக்ரவர்த்தி இவ்விறைவனை வழிபட்டு தனது பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்ட ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.