அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (தாத்தையங்கார்பேட்டை)

God Name : ஸ்ரீ கைலாசநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர், அம்பாள்: ஸ்ரீ கருணாகரவல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கைலாசநாதர். சுயம்பு லிங்கம். அழகான பெரிய லிங்க மூர்த்தம். உடன் எழுந்தருளியிருக்கும் அம்பாள் ஸ்ரீ கருணாகரவல்லி மிகுந்த வரப்பிரசாதி. தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதால் கருணாகரவல்லி என்ற பெயர் கொண்டாள். இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சமுக பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். பஞ்ச வக்த்ர பைரவர் எனப் போற்றப்படுகிறார். சூலம், சக்கரம், மழு, கதை, கத்தி, கபாலம், டமருகம், சங்கு, பாசம், கேடயம் ஏந்திய பத்து திருக்கரங்களுடனும், ஐந்து திருமுகங்களுடனும், கபால மாலை அணிந்தும் காட்சி தரும் கம்பீரமான திருவுருவம். பின்னால் யாளி வாகனம் உள்ளது. பிரகார வலச்சுற்றில் பிள்ளையார், முருகன், காசி விசாலாட்சி, குங்குமவல்லி, அகோரவீரபத்ரர், கால பைரவர், கபால பைரவர், சூரிய - சந்திரர்கள், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். வீரபத்ர சுவாமி தனி சந்நிதி கொண்டுள்ளார். ஊருக்கு வெளியே சற்றுத் தள்ளி ராஜகோபால சுவாமி கோவில் ஒன்றும் இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.