அருள்மிகு விஷமங்களேஸ்வரர் திருக்கோவில் (துடையூர்)

God Name : விஷமங்களேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

கடம்பவனேஸ்வரரை தினமும் வழிபட்டு வந்த பக்தர் ஒருவரை நாகம் தீண்டிவிட்டது. உயிர் பிரியும் நிலையில் இவ்விறைவனைப் பார்த்து கண்ணீர் மல்க வேண்டினார். விஷம் இறங்கி பிழைத்துக் கொண்டார். இதனால் இவ்விறைவன் விஷமங்களேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். இத்தலத்தில் விஷ ஜந்துக்கள் எதுவும் கடிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் வழிபட்ட ஸ்தலம். சகாதேவன் இங்கு சூரியனை வழிபட்டுள்ளான். இவ்விறைவனை வழிபட்டால் ஜோதிட ஞானம் கிடைக்கும். துரியோதனின் மனைவி பானுமதி வழிபட்ட ஸ்தலம். தேவார வைப்புத்தலம்.
மூலவர்: விஷமங்களேஸ்வரர்் அம்பாள்: மங்களநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் விஷமங்களேஸ்வரர். சுயம்பு லிங்கம். கிழக்கு நோக்கிய சந்நிதி. கடம்பவனேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் வீர மங்களேஸ்வரி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். மங்களநாயகி என்ற திருநாமமும் உண்டு. பிள்ளையார், வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், லட்சுமி நாராயணன், சாயா சமேத சூரியநாராயணன், ஸ்வர்ச்சலாம்பாள், வீரபத்ரர், பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். கோஷ்டத்தில் கல்யாணசுந்தரரை கரம் பிடித்த காத்யாயினி, தியான நிலையில் ஞான சரஸ்வதி, உமா ஆலிங்கன மூர்த்தி ஆகியோரை தரிசிக்கலாம். வீணா தட்சிணாமூர்த்தி திருவுருவமும் தத்ரூபமாக உள்ளன. கிழக்கே வாதமுனி எழுந்தருளியுள்ளார். இவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து உட்கொண்டால் வாத நோய்கள் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் விலகுவதாக கூறுகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.