அருள்மிகு மாற்றறிவரதர் திருக்கோவில் (திருவாசி)

God Name : மாற்றறிவரதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

கல்வெட்டுக்களில் இவ்வூரை பாச்சில் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆச்சிராமம் என்பது ஆலயத்தின் பெயர். இரண்டும் சேர்ந்து திருப்பாச்சிலாச்சிரமம் என்றானது. தற்போது திருவாசி என்கின்றனர். இத்தலத்திற்கு வந்த சுந்தரர் பொன் வேண்டி நின்றார். இறைவன் வாளாதிருந்து விட்டார். இவரை நம்பி வந்தேனே, பித்தனைப் போல மௌனமாயிருக்கின்றாரே, இவரை விட்டால் என்னை ஆதரிக்க வேறு ஆள் இல்லை என்ற நினைப்போ? என்றெல்லாம் ஏளனமாகப் பாடினார். 8வது பாடலின்போது, கொஞ்சம் பொற்காசுகளைத் தந்தார் இறைவன். அவை மாற்றுக் குறைவாக இருந்தன. 9 மற்றும் 10 வது பாடல்களில் தனது பிழைகளை பொறுத்து மன்னிக்குமாறு பாடினார். பிரத்யட்சமான இறைவன், பொற்காசுகளை மாற்றுரைத்து காண்பித்தார். இதனால் மாற்றறிவரதர் எனும் திருநாமம் கொண்டார். முன்நாளில் இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லி மழவன் என்பவனின் மகளுக்கு முயலகன் என்ற நோய் வந்தது. மூளை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி (அ) காக்கை வலிப்பு வந்தால் முயலக வியாதி என்று கூறுவர். இதை கேள்விப்பட்ட ஞானசம்பந்தர் அப்பெண்ணை கோவிலுக்கு வரவழைத்து இறைவன் முன் நிறுத்தி, 'துணிவளர் திங்கள்' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி, 'மங்கையை வாடச் செய்யலாமா?' என்று இறைவனிடம் கேட்டு, இறைவனருளால் அவளை குணப்படுத்தினார். ஞானசம்பந்தர் பதிகம் பாடி, முயலகன் நோயைக் குணப்படுத்தியதை நினைவு கூறவே, இத்தலத்து நடராஜர் திருவடியின் கீழ் முயலகன் இல்லாது செய்துவிட்டான் சிற்பி எனக் கூறப்படுவதுண்டு. பார்வதி தேவி இத்தலத்தில் அன்னப்பறவை உருவில் இருந்து கொண்டு தவம் செய்து, இவ்விறைவனை வழிபட்டுள்ளார். இங்குள்ள திருக்குளம் அன்னமாம் பொய்கை எனப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்த சிவபக்தனான கமலன் என்னும் வைசியன் புத்ரபாக்யம் வேண்டி நின்றான். இங்கு கிடைத்த பெண் குழந்தைக்கு அமலை எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். அவள் பார்வதி தேவியின் அம்சம். அவள் பெரியவளானதும், வணிகனின் மைத்துனன் ரூபத்தில் வந்த சிவபெருமான் அமலையை மணப்பதாகக் கூறி, அமலையை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார். அப்போது நிஜ மைத்துனன் அங்கு வரவே, குழப்பம் கொண்ட வணிகனுக்கு, ரிஷப வாகனத்தில் காட்சியளித்து தனது நிஜ ஸ்வரூபத்தைக் காட்டியருளினார் மாற்றறிவரதர். தேவாரத்திருத்தலம்
மூலவர்: மாற்றறிவரதர், அம்பாள்: பாலசௌந்தரி. கொள்ளிட ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. ஸ்வாமி சந்நிதி மாடக்கோவில் அமைப்பில் உயரமான மேடை மீது அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் மாற்றறிவரதர். சமீவனேஸ்வரர் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் ஆகிய திருநாமங்களும் உண்டு. உட் பிரகாரத்தில் பிள்ளையார், முருகன், சூரியன், பைரவர், மஹாலட்சுமி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் உள்ள ஸ்தல விருட்சமான வன்னி மரத்தருகே அம்பாள் சந்நிதி கொண்டுள்ளார். அழகே உருவாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் பாலசௌந்தரி. பாலாம்பிகை என்ற திருநாமமும் உண்டு. சண்டிகேஸ்வரியையும் தரிசிக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷமான பாலாரிஷ்டம் எனப்படும் பால தோஷத்தை தீர்த்து வைக்கிறாள் பாலாம்பிகை. 3 ஞாயிற்றுக்கிழமைகள் அபிஷேக ஆராதனைகள் செய்து, அந்த தீர்த்தத்தைப் பருகினால் தோஷ நிவர்த்தி ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தீர அம்பாளுக்கு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி பிரார்த்திக்கின்றனர். சமயக்குரவர்கள் திருவுருவங்களில், ஞானசம்பந்தர் நடனக் கோலத்திலும், சுந்தரர் தாளமிட்டு பாடும் கோலத்திலும் காணப்படுகின்றனர். வெளிச்சுற்றில் செல்வ விநாயகர், சகஸ்ர லிங்கம், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சுந்தரருக்கு பொற்கிழி அளித்த ஸ்தபன மண்டபத்தில் நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ளார். அவரது ஊன்றிய காலின் கீழ் முயலகன் இல்லை. பாம்பின் அகன்று விரிந்த படத்தின் மீது திருவடியை ஊன்றி காட்சி தருகின்றார். பாம்பின் வால் கணுக்காலில் சுற்றியுள்ளது. இவரை 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு பூஜிப்போர்க்கு மனநிலை சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். பாம்புக்கடி விஷம் இறங்க, காக்காய் வலிப்பு குணமாக, கடுமையான வயிற்றுவலி தீர, ஆஸ்துமா நோயிலிருந்து விடுபட, மனநிலை சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாக நடராஜருக்கு வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து பிரார்த்திக்கின்றனர். கோவிலுக்கு அருகே சிலம்பி நதி என்னும் சிற்றாறு ஓடுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.