அருள்மிகு உத்தமர் திருக்கோவில் (பிச்சாண்டார் கோவில்)
God Name : மூலவர்: புருஷோத்தமர், உற்சவர்: புருஷோத்தமர்் மூலவர்: பிட்சாடனர், உற்சவர்: பிட்சாடனர்் மூலவர்: பிரம்மா
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
சத்யலோகத்தில் தாம் நித்ய ஆராதனை செய்து கொண்டிருந்த திருமாலைக் காணாது, பிரம்மதேவர் அவரைத் தேடி பூலோகம் வந்தார். பிரம்மாவின் பக்தியை சோதிக்க வேண்டியே திருமால் இங்குள்ள கதம்ப மரத்தில் ஐக்கியமாகி இருந்தார். அதைத் தெரிந்து கொண்ட பிரம்மன், தமது கமண்டல நீரால் கதம்ப மரத்திற்கு திருமஞ்சனம் செய்தார். பெருக்கெடுத்து ஓடிய திருமஞ்சன நீரே கதம்ப தீர்த்தம் எனப்படுகிறது. பின்னர் திருமாலை வழிபட்டு நற்பலன்கள் பெற்றார்.
பிரம்ம தீர்த்தம் எனப்படும் கதம்ப தீர்த்தக் கரையில் கதம்ப முனிவர் அமர்ந்து கடுந்தவம் புரிந்தார். பிரத்யட்சமான பரந்தாமன், முனிவரை இத்தலத்திலேயே இருந்து கொண்டு சேவித்திருக்கும்படி பணித்தார்.
பிரம்ம தேவருடைய தலையைக் கொய்ததால் தோஷம் கொண்ட சிவபெருமானின் கையில் பிரம்ம கபாலம் ஒட்டிக் கொண்டது. ஒட்டிக் கொண்ட கபாலத்துடன் பல க்ஷேத்ரங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்ட சிவபெருமானின் பிட்சா பாத்திரமாகிய கபாலம் நிறையாமல் குறைவாகவே இருந்தது. எப்போது பிட்சா பாத்திரமாகிய கபாலம் நிறைகிறதோ, அப்போது கபாலம் கையை விட்டு அகலும் என்பது சாப விமோசனம்.
இத்தலத்தை அடைந்தபோது பெருமாள், தனது தேவியான லட்சுமியை நோக்கி, பிட்சை இடுமாறு கூறினார். தாயார் பிட்சையிட்டதும், எப்போதும் நிறையாதிருந்த பிரம்ம கபாலம் நிறைந்து வழிந்தது. இதனால் தாயார் பூரணவல்லி எனும் திருநாமம் கொண்டாள். கபாலமும் கை நழுவியது. தட்சனைக் கொன்ற தோஷமும் சேர்ந்து நீங்கியது. இதனால் இறைவனுக்கு பிட்சாடனர் என்றும், இந்த ஊருக்கு பிட்சாண்டார் கோவில் எனவும் பெயர்கள் வந்தன.
ஜனகர் இத்தலத்தில் பெரிய யாகம் ஒன்றை செய்தார். அப்போது யாகத்திற்காக வைத்திருந்த அவிர் பாகத்தை நாய் ஒன்று புசித்து விட்டதால், புதியதாக அவிர் செய்து யாகத்தை தொடர்ந்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, ஸ்ரீமந் நாராயணன் ஐக்கியமாகியிருந்த கதம்ப மரத்தை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது.
கதம்ப தீர்த்தம் கொண்டதால் கதம்பனூர் என்ற பெயரைக் கொண்டிருந்து, பின்னர் மருவி கரம்பனூர் என்றானதாக கூறுவர்.
சிவகுருவாக - தட்சிணாமூர்த்தியும், விஷ்ணு குருவாக - வரதராஜரும், பிரம்ம குருவாக - பிரம்மனும், சக்தி குருவாக - சௌந்தர பார்வதியும், ஞான குருவாக - தண்டபாணியும், அசுர குருவாக - சுக்ரனும், தேவ குருவாக - ப்ரஹஸ்பதியும் சேர்ந்து சப்தகுரு (7) ஸ்தலமாக விளங்குகிறது.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: புருஷோத்தமர்் உற்சவர்: புருஷோத்தமர்் தாயார்: பூரணவல்லி.
மூலவர்: பிட்சாடனர்் உற்சவர்: பிட்சாடனர்் அம்பாள்: சௌந்தர பார்வதி.
மூலவர்: பிரம்மா் தேவி: ஞான சரஸ்வதி.
கொள்ளிடக் கரையில் வயல்களும் சோலைகளும் நிரம்பிய இடத்தில் ஆலயம் அமைந்துள்ளது. கீழ்ப்புற வாசல் வழியாக கோவிலுக்குள் செல்ல வேண்டும். விஷ்ணுமூர்த்தியே பிரதான மூர்த்தி என்றாலும், இங்கு மும்மூர்த்திகளும் இருப்பதால் மும்மூர்த்தி ஸ்தலம் என்று குறிப்பிடுவார்கள்.
மகாமண்டபத்தில் பெரிய திருவடியை சேவித்துக் கொண்டு, அர்த்த மண்டபத்தை தாண்டி சென்றால் வரும் மூலஸ்தானத்தில், மூலவராக ஸ்ரீ புருஷோத்தமர் என்கிற உத்தமர் கிழக்கு பார்த்தபடி, புஜங்க சயனமாக, பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளார். சுவரில் கதம்ப மகரிஷியும், நாபிக் கமலத்தில் பிரம்ம தேவரும் காணப்படுகின்றனர்.
மூலவரின் முன்பாக, எழிலார்ந்த உற்சவத் திருமேனிகளாக ஸ்ரீ புருஷோத்தமர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
வலதுபுறமாக ஜெயவீர ஆஞ்சநேயர் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
மகா மண்டபத்தின் தெற்கில், மஹாலட்சுமியான பூரணவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். கிழக்கு நோக்கி வீற்றிருந்த கோலம். ஓரமாக ஆண்டாள் சந்நிதியும் இருக்கின்றது.
பெருமாள் சந்நிதியின் பின்புறம், விஷ்ணுவின் கருவறையையொட்டி சிவபெருமானின் மூலஸ்தானம் உள்ளது. மூலவராக பிட்சாடனர் லிங்க வடிவிலும், உற்சவராக பிட்சாடனர் சிலா வடிவிலும் மேற்கு நோக்கி காட்சி தருகின்றனர். பிட்சாண்டார் என்ற திருநாமமும் உண்டு.
இரட்டை விநாயகர்கள், பாலலிங்கம், சுப்ரமண்யர், தசரதலிங்கேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சௌந்தர்ய பார்வதி அம்பாள் பெயருக்கேற்ப அழகே உருவாக தெற்கு நோக்கி தனி சந்நிதி கொண்டுள்ளார். வடிவுடை நாயகி என்ற திருநாமமும் உண்டு.
பலிபீட மண்டபத்தின் வடகிழக்கில், பிரம்மதேவர் தெற்கு நோக்கி எழுந்தருளி தரிசனம் தரும் தனி சந்நிதி இருக்கின்றது. இடது கையில் கமண்டலம், வலது கையில் ஜபமாலை ஆகியன கொண்டு, அன்னபட்சி வாகனத்துடன் தாமரை மலர் மீது அமர்ந்த கோலம்.
துணைவியார் ஞான சரஸ்வதி பிரம்மனுக்கு இடப்புற சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். வீணைக்குப் பதிலாக ஏட்டுச்சுவடியும், ஜபமாலையும் கொண்ட கரங்களும், அபய - வரத முத்திரை கொண்ட கரங்களுடனும் தெற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார்.
பிரம்மாவிற்கு உகந்த மார்கழி மாதம், பிரம்ம முகூர்த்த வேளையில், பிரம்மனுக்கு மஞ்சள் வஸ்திரமும் முல்லைப்பூவும் சாத்தி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும். ஆத்தி இலைகளால் அர்ச்சனை செய்தால் நற்பலன்கள் கிட்டும் என அர்ச்சகர் தெரிவித்தார்.
பிரகார வலச்சுற்றில் வரதராஜர், ஸ்ரீ ராமர், லட்சுமி நாராயணன், வேணு கோபாலன் சந்நிதிகள் இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.