அருள்மிகு செந்தாமரைக்கண்ணன் திருக்கோவில் (திருவெள்ளறை)

God Name : புண்டரீகாட்சப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

பெரிய பிராட்டியார் லட்சுமி தேவி பரந்தாமனிடம் பிரார்த்தித்து ஒரு கோரிக்கை விடுத்தாள். தான் செங்கோல் ஏந்தி பரிபாலனம் செய்ய வேண்டும், தனக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. பூலோகம் சென்று ஸ்வேதகிரி எனப்படும் இத்தலத்தில் காத்திருக்குமாறு பரந்தாமன் கூறினார். இத்தலத்திலுள்ள பூங்கிணறு அருகேயுள்ள குகையில் இருந்து கொண்டு நோன்பியற்றி, தவமிருந்தாள் பிராட்டி. மார்க்கண்டேய மகரிஷி, பூமி தேவி, சிபி சக்ரவர்த்தி, பெரிய திருவடி ஆகியோருக்குச் சேவை சாதிக்க வந்த பரந்தாமன், திருமகளுக்கும் காட்சி தந்தார். அவள் கோரிய வரத்தை அளித்தார். இத்தலத்தில் புண்டரீகாட்சர் என்ற யோகி பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டு ஆராதித்து வந்தார். அவருக்குப் பிரத்யட்சமான பெருமாள், யோகியின் வேண்டுகோளுக்கிணங்க 'புண்டரீகாட்சர்' என்ற திருநாமத்தோடு இங்கேயே கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஸ்வேதகிரி எனப்படும் வெள்ளறை எனும் இத்தலத்திலுள்ள வனத்தில் தனது படையுடன் தங்கியிருந்தார் சிபிச் சக்கரவர்த்தி. அப்போது ஸ்வேத வராஹம் (வெள்ளைப் பன்றி) ஒன்று அவர் முன்னால் ஓடியது. அதைத் துரத்திக் கொண்டு வெகு தூரம் ஓடினார் சக்கரவர்த்தி. நான்கு திசைகளிலும் ஓடிய வராஹம் திடீரென ஒரு புற்றுக்குள் மறைந்தது. புற்றினருகே மார்க்கண்டேய மகரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். மகரிஷியின் யோசனைப்படி புற்றுக்குத் திருமஞ்சனம் செய்தார் சிபி. அவர்களுக்குத் திருமகள் காட்சி தந்தாள். பெருமாளும் அவர்கள் முன் தோன்றி, பிராட்டிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு கோவில் நிர்மாணிக்குமாறு பணித்தார். பின்னர் அர்ச்சாரூபமாய் எழுந்தருளி விட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. வராஹம் ஓடிய இடமெல்லாம் தீர்த்தம் அமைத்து, இக்கோவிலை நிர்மாணித்தார் சிபிச் சக்கரவர்த்தி. இத்தலத்தில் பங்கஜவல்லித் தாயாரே ஆட்சி செலுத்துகிறார். உற்சவங்களில் தாயார் முன்னே செல்ல, பெருமாள் பின்னால் போவார். வீதிவுலா முடித்து பெருமாள் 'நாழி கேட்டான் வாசலில்' நின்று, தாயாரிடம் எத்தனை நாழிகை ஆயிற்று எனச் சொல்லி விட்டுப் போகும் ஐதீகம் தொடர்கிறது. திருவெள்ளறை வந்து பெருமாளைச் சேவித்த பின்னரே மோட்சம் என்ற ஐதீகத்தை வைணவர்கள் சம்பிரதாயமாகப் பின்பற்றுகின்றனர் என ஒரு குறிப்பு கூறுகிறது. இது வராஹ அவதார க்ஷேத்திரம் என்பர். உய்யக்கொண்டான் மற்றும் எங்களாழ்வான் அவதாரத் தலமாகும். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: புண்டரீகாட்சப் பெருமாள், தாயார்: செண்பகவல்லி. மேடான பகுதியில் அமைந்துள்ள கோவில் என்பதால், 18 படிக்கட்டுகள் ஏறிச் சென்று கோவில் வாசலை அடைய வேண்டும். இது பகவத் கீதையின் 18 பாகங்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. கோபுர வாசலில் உள்ள அழகிய கிருஷ்ணருக்கு வெண்ணெய் உருண்டை சாத்துகிறார்கள். மூலஸ்தானத்தில் புண்டரீகாட்சப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில், பிரயோக சக்கரத்துடன் சேவை சாதிக்கின்றார். 'செந்தாமரைக்கண்ணன்' என்ற திருநாமமும் உண்டு. சூரிய - சந்திரர்கள் சாமரம் வீசுகின்றனர். இடது புறத்தில் பூமி பிராட்டி அமர்ந்திருக்க, கருடாழ்வாரும், மனித உருவில் ஆதிசேஷனும் நின்று கொண்டிருக்க, வலது புறமாக மார்க்கண்டேயர் மண்டியிட்டு அமர்ந்துள்ளார். கருடன், சிபி சக்ரவர்த்தி, பூதேவி, மார்க்கண்டேய ரிஷி, பிரம்மா, ருத்திரன், இந்திரன் ஆகியோருக்குப் பிரத்யட்சமானதாக ஐதீகம். மூலவருக்கு முன்பாக உற்சவரான புண்டரீகாட்சப் பெருமாளும், உற்சவத் தாயாரான பங்கஜவல்லி தாயாரும் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். மூலஸ்தானத்திற்கு இரண்டு வாசல்கள் உள்ளன - உத்தராயண வாசல் (ஆடி மாத முதல் தேதியிலிருந்து மார்கழி மாத கடைசி தேதி வரை) மற்றும் தட்சிணாயன வாசல் (தை மாத முதல் தேதியிலிருந்து ஆனி மாத கடைசி தேதி வரை). இரண்டு வாசல்களிலுமுள்ள முதல் 8 படிகள் 'ஓம் நமோ நாராயணா' எனும் அஷ்டாட்சர மந்திரத்தையும், அடுத்த 24 படிகள் காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களையும் குறிக்கும். இரண்டாம் பிரகாரத்திலுள்ள பலிபீடம் மிகவும் சக்தி வாய்ந்தது. நான்கு வேதங்களைக் குறிப்பதாக நான்கு படிகள் உள்ளன. மூலவர் தைலக்காப்புத் திருமேனி என்பதால் திருமஞ்சனம் கிடையாது. திருமஞ்சனம் பலிபீடத்திற்கே செய்கின்றனர். சேவார்த்திகள் பிரார்த்தனை செய்து கொண்டு பலிபீடத்திற்கு திருமஞ்சனம் செய்கின்றனர். நெய்விளக்கு ஏற்றுகின்றனர். இதை 'நாழி கேட்டான் வாயில்' என்பார்கள். உள்புறத்து மண்டபத்தில் ராமாயண சிற்பங்கள் அழகாக இருக்கின்றன. 'ஆழ்வார் திருச்சுற்று' எனப்படும் மூன்றாம் பிரகாரத்தில் செண்பகவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். 'பெரியபிராட்டியார்' என்ற திருநாமமும் உண்டு. முன் மண்டபம், மஹா மண்டபம், அர்த்த மண்டபம் யாவும் உள்ளன. இந்தச் சுற்றில் ஆழ்வாராதிகள் சந்நிதி கொண்டுள்ளனர். சிறு சந்நிதியில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளியுள்ளார். நான்காம் பிரகாரத்தில் பெரிய பாறையில் குடையப்பட்ட குகை உள்ளது. இங்கிருந்து பார்த்தால் சுவாமி கோவிலின் விமானம் தெரியும். இங்குதான் தாயார் நோன்பியற்றிய பூங்கிணறு இருக்கின்றது. ஐந்தாம் பிரகாரத்தில் ஸ்வஸ்திக் வடிவில் திருக்குளம் ஒன்று இருக்கின்றது. இக்குளத்தின் ஒரு பக்கத்தில் நீராடுபவர்களை, மற்றொரு புறத்தில் இருப்பவர்கள் பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் கிழக்கே பத்ம தீர்த்தம், தெற்கே வராஹ தீர்த்தம், மேற்கே மணிகர்ணிகா, வடக்கே குஜஹஸ்தி மற்றும் மத்ய க்ஷீர புஷ்கரிணி ஆகியன உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.