அருள்மிகு ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் (இடையாற்றுமங்கலம்)

God Name : ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

உத்திர நட்சத்திர தினத்தில் அவதரித்த மாங்கல்ய மகரிஷி, மாங்கல்ய தேவதை மற்றும் அட்சதை தேவதை ஆகியவர்களின் குரு ஆவார். இத்தலத்தில் அகஸ்தியர், வசிஷ்டர் ஆகிய மகரிஷிகளின் திருமண மாங்கல்ய தாரண பூஜைகளை நடத்தியவர். திருமண பத்திரிகையில் குறிப்பிடப்படும் அமிர்த நேரத்தில் இத்தலத்திற்கு வந்து மாங்கல்யம் நிலைக்க பிரார்த்தனை செய்கின்றனர். தம்பதிகளின் ஒற்றுமைக்காகவும் வழிபட வேண்டிய ஸ்தலம் என்பார்கள். திருமணம் நிச்சயித்தவுடன் பத்திரிகையை இத்தலத்திற்கு கொண்டு வந்து இறைவனடியில் சேர்ப்பித்து பூஜை செய்கின்றனர். பின்னர் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபடுகின்றனர். உத்திர நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய ஸ்தலம்.
மூலவர்: ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ மங்களாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கிழக்கு பார்த்த சந்நிதி. உற்சவராக சோமாஸ்கந்தர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். அம்பாள் மங்களாம்பிகை தெற்கு பார்த்த சந்நிதியில் எழுந்தருளி அருள் புரிகின்றாள். வலச்சுற்றில் விநாயகர், பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி - தெய்வயானை சமேத முருகப் பெருமான் மற்றும் மாங்கல்ய மகரிஷியின் திருவுருவம் தரிசிக்கலாம். லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில் ஒன்றும் இவ்வூரிலுள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.