அருள்மிகு சாமவேதீஸ்வரர் திருக்கோவில் (திருமங்கலம்)
God Name : ஸ்ரீ சாமவேதீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
பலாச வனத்திலுள்ள கோவில். திருமகளாகிய திரு இருந்து மங்கலம் பெற்றதால் திருவிருந்தமங்கலம் என்றும், லட்சுமி வழிபட்டதால் திருமங்கலம் என்றும் இவ்வூர் பெயர் கொண்டது.
தந்தையைக் கொன்ற பித்ருஹத்தி தோஷம் நீங்குவதற்காக, சண்டிகேஸ்வரர் இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். தாயைக் கொன்ற மாத்ருஹத்தி தோஷம் நீங்குவதற்காக பரசுராமர் இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். எனவே பித்ரு தோஷம் மற்றும் முன்னோர்களின் சாபங்களைப் போக்கவல்ல ஸ்தலம் என்பர். காசிக்கு போன பலனைத் தரும் க்ஷேத்ரம் என்பார்கள். கயாவில் உள்ளது போல் பல்குனி எனும் நதியை இங்கு ஸ்வாமியே உண்டு பண்ணியதாகக் கூறப்படுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனார் பிறந்து, முக்தி பெற்ற ஸ்தலம். தனது புல்லாங்குழல் இசையினால் வேத வியாசரின் பிரதான சீடரான ஜைமினி முனிவர் இத்தலத்தில்தான் சாம வேதத்தை, ஆயிரம் சாகைகளாகப் பிரித்து ஓதி இவ்விறைவனைப் பூஜித்தார். இதனால் இவ்விறைவன் ஸ்ரீ சாமவேதீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
தேவார வைப்புத்தலம்.
மூலவர்: ஸ்ரீ சாமவேதீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ லோகநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சாமவேதீஸ்வரர். தேஜோமயமான அழகிய லிங்க மூர்த்தம். தீபாராதனையில் மேலும் பிரகாசிக்கின்றார். வாசப்படியில் நின்றவாறே சிவனை தரிசிக்கும் வண்ணம் அமையப்பெற்ற சந்நிதி. கொன்றை மரத்தடியில் சுயம்புவாக எழுந்தருளியவர்.
கோஷ்டத்தில் பிட்சாடனர், சங்கரநாராயணர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். சின்முத்திரை இல்லாமல் அபயக்கரம் நீட்டுபவராக வித்தியாசமாகக் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.
அம்பாள் ஸ்ரீ லோகநாயகி தனி சந்நிதி கொண்டுள்ளார். அபய - வரத ஹஸ்தங்களுடன், அழகே உருவாக எழுந்தருளியிருக்கும் உலக நாயகி மிகுந்த வரப்பிரசாதி.
வலச்சுற்றில் காணப்படும் சந்நிதிகளில் மஹாகணபதி, தெய்வயானை உடனாய கல்யாண சுப்ரமண்யர், மயில் மேல் அமர்ந்த வள்ளி, பரசுராமர் வழிபட்ட லிங்கம், ஆறுமுகங்களும் நான்கே கரங்களும் கொண்ட ஷண்முகர், அஷ்டபுஜ பைரவர், சதுர்ப்புஜ பைரவர் என அனேக மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
ஆனாய நாயனாருக்கு தரிசனம் தந்து முக்தியருளிய லிங்க மூர்த்தம் விசேஷமானது. இதற்கு ஐந்து வகை எண்ணெய்க் கலப்பில் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
இழந்த பொருளை மீண்டும் கிடைக்கச் செய்பவர் இங்குள்ள சனீஸ்வர பகவான். இவரது காக வாகனம் வடக்கு பார்த்து உள்ளது. திருமணத்தடை நீக்கும் வரப்பிரசாதியாக துர்க்கை எழுந்தருளியுள்ளார்.
பலாச்சுளைகளை தேனில் தோய்த்து ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் நைவேத்யம் செய்தால் தீராத வியாதிகளும் தீரும் என்று அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.