அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோவில் (ஊட்டத்தூர்)
God Name : சுத்த ரத்னேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி, துங்கபத்ரா ஆகிய நதிகளுக்கு இடையே யார் பெரியவர்? என்ற போட்டி இருந்தது. சிவபெருமான் நந்தியம்பெருமானை அழைத்து அனைத்து நதிகளையும் குடிக்கச் சொன்னார். நந்தியின் மூடிய வாயிலிருந்து கங்கை வழிந்ததால் கங்கையே பெரியது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதுவே கொள்ளிடம் வரை நந்தியாறு எனும் பெயரில் ஓடுகிறது.
நந்தியாறு உற்பத்தி ஆகும் ஊற்றுதான் திருக்குளம். அதனால் இவ்வூர் ஊற்றத்தூர் எனப் பெயர் பெற்றது.
அப்பர் பெருமான் இவ்வூருக்கு வந்தபோது ஊர் முழுக்க சிவலிங்கங்கள் காட்சியளித்ததால், தரையில் கால் வைக்கலாகாது என 5 கி.மீ. தள்ளி நின்று பாடினாராம். அப்படிப் பாடிய ஊரே பாடலூர் ஆகும்.
மூலவர்: சுத்த ரத்னேஸ்வரர், அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சுத்த ரத்னேஸ்வரர். ஒளி வீசும் தேஜோமய லிங்கம்.
தீபாராதனை காண்பிக்கும்போது மூலவர் ஜோதி வடிவாகக் காட்சி தருகின்றார். அன்னை அகிலாண்டேஸ்வரி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
இங்கு பஞ்சாட்சர மந்திரம் கூறினால் தோஷங்கள் விலகும். மாசி மாத வளர்பிறையில் கூறுவது கூடுதல் விசேஷம்.
இரட்டை விநாயகர்கள், கோடி விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், இரட்டை லிங்கங்கள், ஐந்து நந்திகேஸ்வரர்கள், தட்சிணாமூர்த்தி, மனித வடிவிலுள்ள அதிகார நந்தி, கஜலட்சுமி - சரஸ்வதி - துர்க்கை, ஸ்ரீ காத்யாயினி, வீரபத்ர ஸ்வாமி, பைரவர் என அநேக மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்கநதனம், யானை நதனம், யாழி நதனம் எனும் பஞ்சநதப் பாறைகளான சிலா கற்களைக் கொண்டு உருவான நடராஜப் பெருமானின் திருவுருவம் அபூர்வமானதாகவும், அரிய வேலைப்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்கின்றது. பத்தடி உயரம் கொண்ட அழகிய நெடிய திருமேனி. லேசாகத் தட்டினால் ஓம் எனும் நாதம் எழுப்பும் திருமேனி. முகத்தைச் சாய்த்து நடராஜரைப் பார்க்கும் சிவகாமியம்மையின் திருவுருவம் அருகே இருக்கின்றது.
12 ராசிகள் - 27 நட்சத்திரங்கள் மேற்கூரையில் செதுக்கப்பட்டுள்ளன. 1300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட கோவில். ராஜராஜ சோழன் கட்டியதாகக் கூறப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.