அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில் (வாலிகண்டபுரம்)

God Name : வாலீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

வாலி வழிபட்ட இறைவன் என்பதால் வாலீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். இத்தலத்தில் தவம் மேற்கொண்ட வாலி, தன்னுடன் போர் புரியும் எதிரிகளின் பலத்தில் பாதி தன்னைச் சேர வேண்டுமென (வரம் பெற்றார்). பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது இவ்விறைவனை வழிபட்டுப் பூஜித்துள்ளனர். இலுப்பை எண்ணெய் கலந்த நெய் அபிஷேகம் சிவபெருமானுக்குச் செய்கின்றனர். மக்கட்பேறு வேண்டுவோர்க்குக் கைமேல் பலன் கிடைப்பதாகக் கூறுகின்றனர். பாலதண்டாயுதபாணிக்கு பங்குனி உத்திர விழா பிரசித்தம்.
மூலவர்: வாலீஸ்வரர்் அம்பாள்: வாலாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக வாலீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். பெரிய லிங்கத் திருமேனி. தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் வாலாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சிலை வடிவில் வாலீஸ்வரர் நடனம் புரிவது பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் அழகு. ஆண்டிக் கோலத்தில் முருகப் பெருமான் ஏழடி உயர திருமேனியுடன் அழகுற விளங்குகிறார். கருவறையின் இடப்புறமாக ஸ்ரீ தேவி - பூ தேவி சகிதமாகப் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இக்கோவில் பெரம்பலூரிலிருந்து 8 கி.மீ. ஆத்தூர் பாதையில் அமைந்துள்ளது. பெரம்பலூரிலிருந்து 20 கி.மீ. ஆத்தூர் பாதையில் வெங்கனூர் உள்ளது. இங்கு விருத்தாசலீஸ்வரர் - விருத்தாம்பிகை எழுந்தருளியுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.