அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (செட்டிக்குளம்)
God Name : ஏகாம்பரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
இவ்வூருக்கு வந்திருந்த வணிகன் ஒருவன், இரவில் பேரொளியுடன் தோன்றிய சிவலிங்கத்தையும் அதை தேவர்கள் பூஜிப்பதையும் கண்டான். மறுநாள் இந்த நிகழ்வைப் பற்றி பராந்தக சோழனிடம் தெரிவித்தான். பராந்தக சோழனும் அவரது விருந்தினரான குலசேகர பாண்டியனும் இந்த நிகழ்வு நடந்த அரச மருகே வந்து பார்த்தனர். அப்படி எதுவும் நடந்ததற்கான அறிகுறிகள் ஏதும் அங்கு தெரியவில்லை.
அப்போது அங்கு வந்த வயோதிகர் ஒருவர் அவர்களை அழைத்துச் சென்று லிங்கத்தைக் காண்பித்து விட்டு, அருகிலிருந்த குன்றின் மேல் நின்று கொண்டு, கையில் கரும்புடன் முருகனாக காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதனால் மகிழ்ந்த குலசேகர பாண்டியன், ஊருக்குள் சிவாலயத்தையும் குன்றின் மீது முருகன் கோவிலையும் கட்டியதாக வரலாறு.
நித்ய பூஜைகளையும், உற்சவங்களையும் சிறப்புற நடத்துகின்றனர்.
மூலவர்: ஏகாம்பரேஸ்வரர், அம்பாள்: காமாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஏகாம்பரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சுயம்பு லிங்கம். பெரிய திருமேனி.
விசாலமான கருவறையில் ஏகாந்த சேவையாக தரிசனம் தருகிறார். பங்குனி மாதம் 19, 20, 21 தேதிகளில் சூரிய ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
அம்பாள் காமாட்சி தனி சந்நிதி கொண்டுள்ளார்.
கோஷ்ட மூர்த்தங்களுடன் நர்த்தன விநாயகர், வலச்சுற்றில் பைரவர், கஜலட்சுமி, சூரியன், வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், மற்றும் நவகிரகங்களை தரிசிக்கலாம்.
ஸ்தாபன மண்டபத்தில் எண்ணற்ற சிற்பங்களும், தெய்வீக திருவுருவங்களும் காணலாம். எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் 100 அடி உயர ஏழு நிலை கோபுரம் அழகாக இருக்கின்றது.
சிற்ப வேலைப்பாடுகள் சிறந்து விளங்கும் ஆலயம். தூண்களில் 12 ராசிக்குரிய குபேரர்களின் சிற்பங்கள் மீன் வாகனத்துடன் காணப்படுகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.