அருள்மிகு பிரஹதீஸ்வரர் திருக்கோவில் (கங்கைகொண்டசோழபுரம்)
God Name : பிரஹதீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
ராமநாதபுரம்
Call : +91-
ராஜராஜ சோழனின் மைந்தன் முதலாம் ராஜேந்திர சோழன் (1012-1044) புதிய நகரத்தை உருவாக்கி அதைப் புனித கங்கையால் புனிதப்படுத்த தீர்மானித்தான். வடநாட்டை ஆள்பவர்களை தனது படைபலம் கொண்டு வெற்றி கண்டு, அங்கிருந்து கங்கை நீருடன் திரும்பினான்.
தஞ்சையில் தனது தந்தை கட்டியது போன்ற பெரிய கோவில் ஒன்றைக் கட்டி அதை கங்கை நீரால் புனிதப்படுத்தினான். இதனால் இவ்வூர் கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயர் பெற்றது.
நிறைய வடிகால்களுடன் கூடிய சோழகங்கம் ஏரி எனும் ஏரியை 24 கி.மீ நீளத்திற்கு அமைத்தான். இதில் கங்கையை சேர்த்ததாக குறிப்பு ஒன்று கூறுகிறது. ஜலமயமான ஜயஸ்தம்பம் என்று இந்த ஏரியை கூறுகின்றனர்.
ஒரு சமயம் ராஜேந்திரன் தனது அமைச்சரிடம் பெரிய கோவில் கட்ட எவ்வளவு செலவாயிற்று எனக் கேட்டானாம். அமைச்சருக்கு நினைவுக்கு வரவில்லை. அருகிலிருந்த பிள்ளையாரிடம் வேண்டினாராம். காவிக்கல் 8000 செம்புக்காசு, காவி நூல் 8000 செம்புக்காசு என்று நினைவுபடுத்தினார் பிள்ளையார். இதனால் இவரை கணக்குப் பிள்ளையார் என்று கூப்பிடுகின்றனர்.
ஐப்பசி பௌர்ணமியில் 108 மூட்டை அரிசியால் சாதம் வடித்து, பிரஹதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்கின்றனர். காய்கறிகளால் அலங்காரம் செய்யப்படுவது பார்க்க ஆனந்தமாக இருக்கும்.
ஸ்வாமிக்கு 25 மீட்டர் வேஷ்டியும், 14 அடி உயர மாலையும், அம்பாளுக்கு 9 கஜ புடைவையும் சாத்த வேண்டும்.
மூலவர்: பிரஹதீஸ்வரர், அம்பாள்: பிரஹந் நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பிரஹதீஸ்வரர். மிகப் பெரிய திருமேனி. இவருக்கு பெருவுடையார், கங்கை கொண்ட சோழீச்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. கல்வெட்டில் திருப்புலீஸ்வரமுடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலவரின் அடியில் சந்திரகாந்தக்கல் பொருத்தியுள்ளனர். கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் கதகதப்பாகவும் மூலஸ்தானத்தை வைத்திருக்கும் சந்திரகாந்தக்கல் எனக் கூறப்படுகிறது.
சிவலிங்கத் திருமேனியின் அமைப்பும் விமானத்தை போன்றே உள்ளது. அடிப்பாகம் சதுரமாகவும், அதற்கு மேல் எண்பட்டை வடிவிலும், உச்சியில் வட்ட வடிவிலும் அமைந்துள்ளது. லிங்கத்தின் குறுக்களவு 3 அடி. ஆவுடையாரின் சுற்றளவு 50 முழத்திற்கு மேலிருக்கும். லிங்கத்தின் உயரம் 13 அடி இருக்கும்.
மூலஸ்தானத்திற்கு முன்னுள்ள முகமண்டபத்தை பல்வேறு சிற்பங்களால் அலங்கரித்துள்ளனர்.
அம்பாள் பிரஹந் நாயகி எனப்படும் பெரிய நாயகி மிகுந்த வரபிரசாதியாக தரிசனம் தருகின்றாள். ஒன்பதரை அடி உயரம் கொண்டு சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. மங்களகரமான வதனம். ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்துள்ளனர்.
மிகப் பெரிய வடிவம் கொண்ட நந்தியம் பெருமானின் திருவுருவம் பார்க்க அழகாக இருக்கின்றது. ஸ்வாமிக்கும் நந்திக்கும் 200மீ இடைவெளி. சூரியனின் ஒளிக்கதிர்கள் நந்தியின் மீது விழுந்து கருவறையிலுள்ள லிங்கத்தில் பிரதிபலிப்பது கண்கொள்ளாக் காட்சி. கருவறை விளக்கை அணைத்து விட்டு பார்த்தால் பிரகாசமாக இருக்கும்.
நேர் வடக்காக உள்ள வாசலில் காணப்படும் சண்டேசுவரரின் சிற்பம் வேறு எங்கும் பார்த்திராத அற்புதமான சிற்பம். பசு மாடு ஒன்று லிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறது. மரத்தின் மேல் சண்டேசுவரரின் தகப்பனார் இருக்கின்றார். சண்டேசுவரர் தகப்பனாரின் காலை வெட்டுவது போல ஒரு சிற்பம். நடுவே பெரிய சிற்பமாக உமையவளுடன் மகேஸ்வரன் வீற்றிருக்க, திருவடியின் கீழ் கூப்பிய கரங்களுடன் சண்டிகேச்வரர் அமர்ந்திருக்க, சண்டிகேஸ்வரரின் திருமுடியில் பூச்சரத்தை சூட்டி பரிவட்டம் கட்டுகிறார் இறைவன்.
நர்த்தன கணபதி, கூத்தபிரான், சங்கரநாராயணர், கங்காதரர், காலாந்தகர், காமதகனர் போன்ற திருவுருவங்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன.
20 கரங்களுடன் உக்ர கோலத்தில் சீறும் மகிஷாசுரமர்த்தினியின் தோற்றம் பிரம்மிக்க வைக்கின்றது. காலடியில் அசுரனை மிதித்தபடியான வடிவம். பக்கத்திலுள்ள சிங்கம் அசுரனின் ரத்தத்தை குடிப்பது போல செதுக்கியுள்ளார் சிற்பி.
நாலடி சதுரம் கொண்ட ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட நவகிரகங்கள் சிறந்த வேலைப்பாட்டை தெரிவிக்கின்றன. இரண்டு அடுக்கு பீடத்தின் அடிப்பாகம் இரு சக்கரங்கள் கொண்ட தேர் போன்ற அமைப்பிலும், அவற்றை ஏழு குதிரைகள் இழுப்பது போலவும், தேர் தட்டில் அருணன் அமர்ந்தும், நடுவில் தாமரை இதழ்களுடன் கூடிய சூரியனும், எட்டுத்திக்கை நோக்கி சுற்றிலும் எட்டு கிரகங்களும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது புதுமையாகவும், அற்புதமானதாகவும் இருக்கின்றன.
பிரகார சுற்றுச்சுவர் 584 அடி நீளமும் 372 அடி அகலமும் கொண்டுள்ளது.
27 அடி குறுக்களவுள்ள சிங்கமுகக் கிணறும் பெரிய யாளியும் பிரம்மிக்க வைக்கின்றன. சிம்மக்கிணற்றில் கங்கை நீர் இருப்பதாக ஐதீகம். சிங்கத்தின் முன்னங்கால்களினூடே படிகள் கிணற்றிற்குள் செல்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.