அருள்மிகு பொது ஆவுடையார் திருக்கோவில் (பரகலக்கோட்டை)
God Name : பொது ஆவுடையார் எனப்படும் ஸ்ரீ மத்யபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
இறைவனை அடைய இல்லறமே சிறந்தது என்று வான்கோபர் எனும் முனிவரும், துறவறமே சிறந்தது என்று மகாகோபர் எனும் முனிவரும் தர்க்கத்தில் பெருமானிடம் நியாயம் கேட்டு நின்றனர். இருவரது வாதங்களையும் கேட்ட நடராஜப் பெருமான், நீதி நெறி முறை தவறாமல் மன உறுதியுடன் இருந்தால் இரண்டுமே சிறந்தது என தீர்ப்பு வழங்கினார். மத்யஸ்தம் செய்ததால் ஸ்ரீ மத்யபுரீஸ்வரர் என்றும், பொதுவான தீர்ப்பு வழங்கியதால் பொதுவுடையார் என்றும் திருநாமம் கொண்டார். தில்லைக்கூத்தன் தனது பரிவாரங்களுடன் இத்தலத்திற்கு வந்து தீர்ப்புக் கூறிய தினம் சோமவாரம். அன்றிரவு பூஜைகளை தில்லையில் முடித்துக் கொண்டு இங்கு வந்தார். எனவே ஒவ்வொரு திங்கட்கிழமை இரவும் 12 மணிக்கு இங்கு நடை திறந்து வழிபாடு நடக்கும். மற்ற நாட்களில் நடை திறக்கப்படுவதில்லை. கார்த்திகை சோமவாரங்களில் சிறப்பு ஆராதனைகள் நடக்கும். தை மாதப் பொங்கலன்று மட்டும் பகல் முழுவதும் சந்நிதி திறந்திருக்கும்.
பாட்டுவானாச்சி எனும் ஆற்றின் கரையிலுள்ள வெள்ளால மரத்தின் கீழ் அமையப் பெற்ற கோவிலில் கோவில் கொண்டுள்ளார் பொது ஆவுடையார். மூலஸ்தானம் என்று கருதப்படும் வெள்ளால மரத்தின் அடியில் ஸ்ரீ மத்யபுரீஸ்வரர் எனப்படும் பொது ஆவுடையார் அரூபமாக எழுந்தருளியுள்ளார். முழுக் கோவிலுக்குமே ஆலமரம் குடை பிடித்தாற் போல உள்ளது. ஆலமரமே மூர்த்தி. விக்ரஹங்கள் ஏதுமில்லை. ஆலமரத்தின் அடிப்பகுதியில் சந்தனத்தைப் பூசி, அதன் மேல் கண்மலர்கள் - நெற்றிப்பட்டம் - திருவாய் - திருவாசி ஆகியன பதித்து, மலர்களால் அலங்கரித்து வழிபடுகின்றனர். அம்பாள் சந்நிதி இல்லை. தனி சந்நிதியில் மேற்கு நோக்கி வீரசக்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவருக்கே பால் அபிஷேகம். அருகே உள்ள புளிய மரத்தடியில் வான்கோபர், மகாகோபர் எனும் இரண்டு முனிவர்களின் உருவங்களைக் காணலாம். உறங்குப் புளி, உறங்காப்புளி மரங்கள் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.