அருள்மிகு தியாகராஜஸ்வாமி/விருந்திட்டீஸ்வரர்; திருக்கோவில் (ஆலக் கோவில்) (திருக்கச்சூர்)
God Name : கச்சபேஸ்வரர், உத்ஸவர்: அமிர்த தியாகராஜர்
திருவாரூர்
Call : +91-
பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கும் பணியிலிருந்த தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் பயன்படுத்தினர்கள். அப்போது கனம் தாங்காமல் மந்தாரமலை மூழ்கத் தொடங்கியது. அது மூழ்காமல் இருக்க திருமால் ஆமை வடிவம் எடுத்து, மலையின் அடிப்பாகம் சென்று தாங்கிப் பிடித்தார்.
அதை தாங்கும் வலிமையை தனக்கு தர வேண்டும் என இவ்விறைவனை புஜித்தார். கச்சபம் (ஆமை) வழிபட்டதால் கச்சபவரு எனப் பெயர் கொண்டு, நாளடைவில் மருவி கச்சூர என்றானது.
ஒவ்வொரு ஸ்தலமாக சென்று இறைவனை தரிசித்து வரும் யாத்திரையில் இவ்வுறுக்குள் வரும்போது உச்சி வேளை. வெய்யிலின் கொடுமையோடு பசி வேறு சேர்ந்து கொண்டது. கோவில் வாசலுக்கு எதிரே வெளியில் ஒரு பதினாறு கால் மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்து தூண் ஒன்றில் சாய்ந்து கொண்டார் சுந்தரர்.
ஒரு பெரியவர் சுந்தரரிடம் வந்து நீ யாரு? இங்கு எதற்காக வந்தாய்? போன்ற பல கேள்விகளைக் கேட்டார். மயக்கத்திலிருந்த சுந்தரர் பதிலேதும் கூறவில்லை. நிலைமையை புரிந்து கொண்ட பெரியவர், ஓடிப் போய் சோற்று மூட்டையுடன் வந்து, சுந்தரருக்கு சோறு போட்டார். பசியாறிய பின் சுந்தரர் பெரியவரை தேட, பெரியவர் மறைந்து விட்டார். பெரியவர் வடிவில் வந்தவர்;
சுந்தரருக்கு பெரியவர் வடிவில் வந்து சோறு போட்டவரே விருந்திட்டீஸ்வரர் ஆவார்.
தேவாரத்திருத்தலம், உபய விடங்கத் தலங்களுள் ஒன்று
மூலவர: கச்சபேஸ்வரர், உத்ஸவர்: அமிர்த தியாகராஜர், அம்பாள்: அஞ்சனாட்சியம்மை
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வருபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார்; கச்சபேஸ்வரர். சிறிய பாணம் கொண்ட
அழகிய திருமேனி. சுயம்பு மூர்த்தம். ஆலக்கோவில் அப்பன், விருந்திட்டவரதர் என்ற திருநாமங்களும் உண்டு.
கிழக்கு பாரத் சந்நிதி.
கச்சப (ஆமை) வடிவில் திருமால், சிவபெருமானை வழிபட்டதால் கச்சபேஸ்வரர் எனும் பெயர் கொண்டார்.
இடது பக்க சந்நிதியில் அம்பாள் அஞ்சனாட்சியம்மை தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றாள்.
பாசம்-அங்குசம் கொண்ட மேற்கரங்கள், அபய-வரத முத்திரைகள் கொண்ட கீழ்க்கரங்களாகிய சதுரபுஜங்களுடன்
கூடிய அழகான திருமேனி. மையாரத் தடங் கண்ணி என்ற பெயரும் உண்டு.
தென் பகுதியில் உள்ள தியாகராஜ மண்டபத்தில் அமிர்த தியாகேசர் எழுந்தருளி தரிசனம் தருகிறார். அபய-வரத
முத்திரைகள் கொண்ட அழகிய திருமேனி. திருமாலுக்கு அமிர்த நடனம் ஆடிக் காட்டியவர். திருக்கச்சூர்
தியாகராஜரின் நடனத்தை நட்ட விநோத நடனம் என்று கூறுவர்.
தியாகராஜ மண்டபத் தூணிலும், விநாயகர சந்நிதியின் விதானத்திலும் ஆமை வடிவில் திருமால்
காட்சியை செதுக்கியுள்ளனர். கோபுர முகப்பு மண்டபத்தில் இதே காட்சியை சுதைச்சிற்பமாக வடித்துள்ளனர்.
ஞான விநாயகர, வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், பஞ்ச லிங்கங்கள், சூரியன், நால்வர், நாகர்,
சிவலிங்கங்கள், ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். 27 தூண்களுடன் நட்சத்ர மண்டபம் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.