அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோவில் (புன்னைநல்லூர் - தஞ்சாவூர்)
God Name : ஸ்ரீ கோதண்டராமர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
சாளக்கிராம மூல விக்ரகங்கள் நேபாள மன்னரால் தஞ்சை மன்னனுக்குக் கொடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் எனும் ஊரில் உற்சவ விக்ரகங்கள் கிடைத்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. இவை 1400 ஆண்டுகள் பழமையானவை. மராத்திய மன்னர் பிரதாப் சிங்கும் அவரது மனைவி யமுனா பாயும் இக்கோவிலைக் கட்டியுள்ளனர். சத்ரபதி சிவாஜியும் கோவிலை விரிவுபடுத்த உதவியுள்ளார் என்று கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கோதண்டராமர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். சீதா பிராட்டி, லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் உடன் உள்ளனர். மூல விக்ரகங்கள் சாளக்கிராமத்தில் இருப்பது கூடுதல் விசேஷம். பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் உற்சவ மூர்த்திகளாக சீதா - லட்சுமண - சமேத ராமர் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளனர். மூன்று வளைவுகளுடன் கூடிய அழகான திருமேனியும், கோதண்டத்தை லாவகமாகப் பிடித்திருக்கும் அழகும் கொண்ட ஸ்ரீ ராமர், சாமுத்ரிகா லட்சணங்களுடன் கூடிய திருமேனியுடன் சீதா பிராட்டியும் சேவார்த்திகளுக்கு மகிழ்ச்சியூட்டும் சேவை சாதிக்கின்றனர். ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் தெற்கு பார்த்து நின்ற கோலத்தில் தூக்கிய வலது கையுடனும், தாமரை மலர் கொண்ட இடது கையுடனும் தனி மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அவருக்கு நேரே நின்று நாம் சேவிக்கும்போது, மேலே விதானத்தில் உள்ள 12 ராசி சின்னங்களுக்குக் கீழ் நாம் நிற்பதால் தோஷ நிவர்த்தி கிட்டும் என்று ஐதீகம். வாயிற்புற ரத மண்டபத்திலுள்ள ஹயக்ரீவர், மஹாசுதர்ஸனர், யோகநரசிம்மர் ஆகிய மூர்த்தங்கள் விசேஷமானவை. தும்பிக்கை ஆழ்வார் மற்றும் ஆழ்வார்கள் தனி சந்நிதி கொண்டுள்ளனர். ஸ்தல விருட்சமான புன்னை மரத்தடியில் ஸ்ரீராமரின் திருவடிகளை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.