அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் (புன்னைநல்லூர் - தஞ்சாவூர்)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

வெங்கோஜி மகாராஜா எனும் சத்ரபதி மகாராஜா அடிக்கடி சமயபுரம் சென்று மாரியம்மனை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டவர். ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய மாரியம்மன் தான் தஞ்சை அருகே உள்ள புன்னை வனத்தில் புற்றுருவில் இருப்பதாகத் தெரியப்படுத்தினாள். அந்தப் புற்றிலிருந்து மண்ணை எடுத்து கழுத்தளவு திருவுருவம் ஒன்றை செய்யுமாறும், பின்னர் புற்றுக்குள் இருக்கும் திருவுருவத்தை வெளிக் கொணர்ந்து, இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே திருவுருவமாக அமைக்குமாறும் கூறினாள். அந்தப் புற்றைத் தேடிக் கண்டுபிடித்து தரிசித்த மகாராஜா ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் உதவியுடன் அன்னையின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்தார். மக்கள் சென்று வழிபட ஏதுவாக பாதை ஒன்றை அமைத்து, புன்னைநல்லூர் என்ற கிராமத்தையும் வழங்கினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அவரது புதல்வனான துல்ஜா மகாராஜாவின் மகளுக்கு வைசூரி வந்து கண் பார்வை மங்கியது. உடனே இந்த மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி வழிபட்டனர். மகளின் கண் பார்வை அன்னையின் அருளால் திரும்பக் கிடைத்தது. காணிக்கையாகச் சிறு கோவிலை எழுப்பினான் துல்ஜா மகாராஜா. துல்ஜாவின் சகோதரர் சஹாஜி தனது குருவான ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் துணைகொண்டு, அம்மன் வடிவங்களைப் பிரதிஷ்டை செய்து கோவிலை விரிவுபடுத்தினான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் அருளே வடிவானவள். புன்னைக்காட்டில் புற்றுருவாக சுயம்புவாக தோன்றியவள். மிகுந்த வரப்பிரசாதி. ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் புற்று மண்ணை எடுத்து அதனாலேயே மாரியம்மன் வடிவம் உருவாக்கி ஸ்ரீசக்கர பிரதிஷ்டையும் செய்துள்ளார். உற்சவமூர்த்திக்கும் ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்துள்ளார். மூலஸ்தானத்தின் பின்புறமாக பாடகாச்சேரி ஸ்வாமிகளின் உருவச்சிலை ஒன்றும் உள்ளது. துவஜஸ்தம்ப மண்டபத்தில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர ஸ்வாமிகளின் சுதைபிம்பத்தை தரிசிக்கலாம். பேச்சியம்மன், லாட சந்நியாசி, மதுரை வீரன், கருப்பன் ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம். கருவறையை ஒட்டி வெளிப்புறமுள்ள தனி சந்நிதியில் துர்க்கை அம்மன் எழுந்தருளியுள்ளார். அர்த்த மண்டபத்திலும் வெளிப்புற சுற்றிலும் நீர்த்தொட்டிகள் உள்ளன. காய்ச்சல் - வைசூரி ஆகிய நோய்கள் இறங்குவதற்கு தண்ணீர் கட்டும் பிரார்த்தனைகள் செய்து கொண்டு நீரை ஊற்றுகிறார்கள். அம்மனுக்கு தினமும் இரண்டு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது இவற்றால் மட்டுமே அபிஷேகம் செய்கின்றனர். 5 வருடங்களுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு தைலாபிஷேகம் செய்கின்றனர். கோடை காலத்தில் அன்னையின் முகத்தில் முத்து முத்தாக வியர்க்கும். தயிர் படையல் (வெங்காயம் கலந்த தயிர் சாதம்), கண் திறக்கப்பட்ட இளநீர் ஆகியவற்றை படைத்து உக்கிரத்தைத் தணிக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.