அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மப் பெருமாள் திருக்கோவில் (சிங்கப் பெருமாள் கோவில்)

God Name : ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர், உத்ஸவர்: பிரஹ்லாத வரதன்

திருவாரூர்

Call : +91-

பாடல் என்றால் சிகப்பு, அத்ரி என்றால் குன்று. ஆகவே பாடலாத்ரி என்பது சிவந்த குன்றைக் குறிக்கும். இங்குள்ள மூலவர்; மிகப் பெரிய திருமேனியுடன், குன்றையே உடம்பாகக் கொண்டு, குன்று போல் காட்சி அளிப்பதால் பாடலாத்ரி நரசிம்மர்; எனும் திருநாமம் கொண்டார். தூணிலிருந்து வெளிப்பட்டு ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த, அதே உக்ர ஸ்வருபத்தை தரிசிக்க ஆசை கொண்ட ஜாபாலி மகரிஷி, இத்தலத்தில் தவம் மேற்கொண்டார். தவத்தில் மகிழ்ந்து அவருக்கு பிரத்யட்சமான நரசிம்மர்; அவரது வேண்டுகோளின்படி, அதே உக்ர ஸ்வரூபத்தில் சேவை சாதிக்கின்றார். பிரதோஷ காலத்தில் அவதரித்தவர்; நரசிம்மர். பிரதோஷ வழிபாடு உகந்தது. மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெறும். அவதார நட்சத்திரமான ஸ்வாதியில் விசேஷமாக கொண்டாடுவார்கள். அபிமான ஸ்தலம், அஷ்ட நரசிம்ம க்ஷேத்ரங்களுள் ஒன்று
மூலவர்: ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர், உத்ஸவர்: பிரஹ்லாத வரதன், தாயார்: அஹோபிலவல்லி மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்டு, அமர்ந்த கோலம். உக்ர ஸ்வரூபமாக காட்சி தருகின்றார். த்ரிநேத்ரதாரி. சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. திருமார்பில் மஹாலக்ஷ்மியை கொண்டுள்ளார. சஹஸ்ரநாம மாலை மற்றும் சாளக்ராமமாலை அணிந்துள்ளார. எட்டடி உயர ஆஜானுபாகு ஆகிருதி. உத்ஸவ மூர்த்தியான பிரஹ்லாத வரதன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பிரதோஷ நரசிம்மர் மற்றும் ஸ்ரீநிவாசர் ஆகியோரின் உத்ஸவ மூர்த்தங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. தாயார் அஹோபிலவல்லி மூலஸ்தானத்தின் வலப்புறமாக சந்நிதி கொண்டுள்ளார. இடப்புறமாக ஆண்டாளின் சந்நிதி உள்ளது. ஆழ்வாராதிகள் மூலவராகவும், உத்ஸவர்களாகவும் தரிசனம் தருகின்றனர். நரசிம்மர் குகை போன்ற கருவறையில், மலையையே உடம்பாகக் கொண்டுள்ளதால், ஸ்வாமியை வலம் வருவதற்கு, மலையையும் வலம் வர வேண்டும். இது சிறப்பான கிரிபிரதக்ஷிணம் ஆகிறது. 1500 வருஷங்களுக்கு முற்பட்ட கோவில்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.