அருள்மிகு கோடியம்மன் திருக்கோவில் (தஞ்சாவூர் - கரந்தை)

God Name : குறிப்பிடப்படவில்லை

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

தஞ்சகன் - தாரகன் எனும் இரு அசுரர்கள், வரங்கள் பல பெற்று, தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். அசுரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டி, தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். பின்னர் அன்னை பராசக்தியிடம் வேண்டிக் கொண்டனர். தஞ்சைபுரீஸ்வரர் கோவிலின் அம்பாள் ஆனந்தவல்லியின் சக்தியையும் சிவசக்தியின் ஒரு பகுதியையும் சேர்த்து சிவ - சக்தி ஸ்வரூபமாக ஒரு அம்மனை படைத்தாள் பராசக்தி. அவளே கோடியம்மன் எனக் கூறப்படுகிறது. அசுரக் கூட்டத்தை அழிக்க, அவர்கள் தப்பி ஓடாதிருக்க, எட்டு திசைகளிலும் தனது சக்திகளை நிலை நாட்டினாள் அம்பிகை. கோடியம்மன், செல்லியம்மன், பச்சைக் காளியம்மன், குந்தாளம்மன், செங்கமல நாச்சியம்மன், ராகு கால காளியம்மன், வடபத்ர காளியம்மன், உக்ர காளியம்மன் ஆகிய தேவிகளை எண்திசைகளிலும் அமர்த்தினாள். புதியதாக கோடியம்மன் வந்திருப்பதை கேட்டறிந்த அசுரர்கள் அவளிடம் போர் புரிய வந்தனர். வெவ்வேறு புதிய வடிவங்கள் கொண்டு தந்திரமாக போர் புரிந்த அசுரர்களை, கோடி அவதாரம் எடுத்து அவர்களை சம்ஹாரம் செய்தாள் அன்னை. பச்சைத் திருமேனியுடன் அவதரித்தவள் அசுரர்களின் ரத்தம் பட்டதினால் பவள வண்ணத் திருமேனி கொண்டாள். அசுர வதம் முடித்ததும் வெண்ணாற்றங்கரையில் எல்லைத் தெய்வமாக அமர்ந்தாள் என ஸ்தல வரலாறு. மாசி அல்லது பங்குனி மாதத்தில் கோடியம்மனுக்கு காப்பு கட்டி திருவிழா களைகட்டும். பின்னர் தஞ்சை கொங்கணேஸ்வரர் கோவிலில் வைத்து பவளக்காளி சிரசும், சங்கரநாராயணர் கோவிலில் வைத்து பச்சைக்காளி சிரசும் அலங்கரித்து முக்கிய வீதிகளில் தூக்கி வருவார்கள். பின்னர் தஞ்சை அரண்மனை சிம்மாசனத்தில் அமர வைப்பார்கள். அடுத்த நாள் காலை பச்சைக்காளி - பவளக்காளி மற்றும் சூலப்பிடாரி சூழ, கோடியம்மன் தஞ்சைநகர் விட்டுப் புறப்பட்டு கோடியம்மன் கோவிலுக்கு திரும்ப செல்வாள். கோடியம்மன் பச்சைத் திருமேனியாளாக வானத்திலிருந்து இறங்கி வந்த இடம் தற்போது களிமேடு கிராமம் எனப்படுகிறது. (கோடியம்மன் கோவிலிலிருந்து 5 கி.மீ. தூரம்) கோடியம்மன் தனது மூக்குத்தியை கழற்றி வீசி உண்டாக்கிய வடவாறு தற்போது தஞ்சை மணிமுத்தாறு எனப்படுகிறது.
கோவிலின் முகப்பின் இருபுறமும் பிள்ளையாரும் முருகப் பெருமானும் எழுந்தருளி ஆசி வழங்குகின்றனர். அவர்களை அடுத்து அய்யனார் எழுந்தருளியுள்ளார். தேவியர் உடன் உள்ளனர். அடுத்துள்ள சந்நிதியில் மதுரை வீரனை காணலாம். பிரதான கருவறையில் கம்பீரமான தோற்றத்தில் பவளத் திருமேனி கொண்டு தரிசனம் தருகின்றாள் கோடியம்மன். கோடியம்மனின் திருவடியில் தாரகனின் வடிவம் இடம் பெற்றுள்ளது. கைகளில் சூலத்தைப் பற்றியபடி ஆக்ரோஷமாக காட்சி தருகின்றாள். இடப்பக்கம் பவளக்காளியும் வலப்பக்கம் பச்சைக்காளியும் எழுந்தருளியுள்ளனர். பிரகார வலச்சுற்றில் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி, ஸ்ரீ கருப்பண்ணஸ்வாமி, விஷ்ணு துர்க்கை, சிவ துர்க்கை, கால பைரவர் ஆகிய பரிவார தேவதைகளை தரிசிக்கலாம். வெளி மண்டபச் சுவரில் கோடியம்மனின் அவதார வரலாற்றை சித்திரங்களாக தீட்டியுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.