பிரதான கருவறையில் மூலவரான மகிஷாசுரமர்த்தினி, மகிஷனைக் காலடியில் போட்டு சம்ஹாரம் செய்யும் கோலத்தில் தரிசனம் தருகின்றாள். ஆயுதங்களுடன் கூடிய அஷ்ட புஜங்கள். ஸ்ரீ பகுளாமுகி எனும் திருநாமம். கிழக்கு பார்த்த சந்நிதி.
ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ சிவ துர்க்கை, கோலாப்பூர் ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர், ஸ்ரீ கங்கா தேவி சகித ஸ்ரீ சிவேந்திரர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். பதினாறு திருக்கரங்களுடன் தரிசனம் தரும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆஜானுபாகு தோற்றத்தில் காணப்படுகிறார். அம்புஜவல்லி, விஜயவல்லி தாயார்களும் உடன் உள்ளனர்.
நெடிதுயர்ந்த தண்டபாணி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்ச லிங்கங்கள், பஞ்சமுகருத்ரர், விதவிதமான பிள்ளையார்கள், ராமர், லட்சுமணர், சீதாப்பிராட்டி, ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களை மண்டபத்தில் தரிசிக்கலாம்.
தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில் ராஜகோபால சுவாமி கோவிலாகவும், மராட்டியர்கள் ஆண்ட காலத்தில் சாரங்கபாணி கோவிலாகவும் இருந்து வந்த இக்கோவில் தற்போது காளி கோவிலாக விளங்குகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.