அருள்மிகு நிசும்பசூதனி உக்ரகாளியம்மன் திருக்கோவில்
God Name : இல்லை
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
சும்ப - நிசும்ப சகோதரர்களான அசுரர்கள் கடுந்தவம் புரிந்து வரங்கள் பல பெற்று, மக்கள் அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தனர். அவர்களுக்கு வரங்களைத் தந்த சிவபெருமான், மோகினிப் பெண் ஒருத்தியால் அழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார். தஞ்சையின் வடகிழக்கு பகுதியில் ஒருவரது வீட்டில், பெண் குழந்தையாகப் பிறந்த உமையவளே, இவர்களை அழிக்கப் பிறந்த மோகினி என்பதை அசுரர்கள் அறிந்திருக்கவில்லை. நிசும்பசூதனி என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். அவள் அழகில் மையல் கொண்ட அசுர சகோதரர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டனர். பின்னர் மோகினியால் அழிவு என்ற நினைவு வந்ததும், அவளை அழிக்க தலைப்பட்டனர். அந்தப் பெண் உடனே காளியாக உருவெடுத்து இருவரையும் சம்ஹாரம் செய்தாள் என வரலாறு. காலங்கள் பல கடந்த பின்னர், நாட்டுமக்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பது கண்டு மனம் நொந்த விஜயாலய சோழ மன்னனுக்கு நிசும்பசூதனியைப் பற்றி தெரிய வர, அவளது உக்கிரத்தை தணித்து, பூஜைகள் பல செய்து, அவளது விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினான் என வரலாறு.
பிரதான கருவறையில் நிசும்பசூதனி எனப்படும் வடபத்ரகாளி மூலவராக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். எட்டு கரங்களும் ஆறடி உயரமும் கொண்ட பிரம்மாண்டமான திருமேனி. கையில் சூலம் ஏந்தி, வலது கால் மடக்கி, இடது காலால் அசுரனின் தலையை மிதித்தபடி, பத்மாசனமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். கை - கால்கள் மற்றும் விலா எலும்புகள் மெலிந்தும், கபாலம் போன்ற தலையும் கொண்டு உக்கிரமாக இருக்கின்றாள். எதிரே பலிபீடம் உள்ளது. தஞ்சையின் வடகிழக்கு எல்லையை காக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறாள். 9 வெள்ளிக்கிழமைகள் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டு, வேப்ப மரத்தில் மஞ்சள் சரடு கட்டி, திருமணத்தடை நீக்கும்படி வேண்டுகின்றனர். கருவறையை அடுத்துள்ள மண்டபத்தில் விநாயகப் பெருமானும், சிவபெருமானும் எழுந்தருளியுள்ளனர். விஜயாலயச் சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காளி தனியாக சந்நிதி கொண்டுள்ளார். வனதுர்கா, பிள்ளையார், சூரியன், ராகு - கேது, சனீஸ்வர பகவான், மாயா சக்தி, விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பொம்மி - வெள்ளையம்மாள் உடனாய மதுரை வீரன் தெற்கு பார்த்த கருவறையில் தரிசனம் தருகின்றார். முனீஸ்வரர், கருப்பசாமி, லாடமுனி ஆகிய பரிவார தேவதைகளும் இங்கு இடம் பெற்றுள்ளனர். சிறிய மாடம் ஒன்றில் சிலாரூபமாக எழுந்தருளியுள்ள சாம்பான் கிறிஸ்தவ பெருமக்களாலும் வழிபடப்படுகின்றார் எனக் கூறப்படுகின்றது. வருடா வருடம் சண்டி ஹோமத்தை சிறப்பாக நடத்துகின்றனர். கீழ வாசலில் வெள்ளை விநாயகர் - வல்லப கணபதி எழுந்தருளியுள்ளார். மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலும் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.