அருள்மிகு ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (தஞ்சாவூர்)

God Name : மூலவர்: ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள், உற்சவர்: ஸ்ரீ அம்ருத வெங்கடேசர்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

மூலவர்: ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள், உற்சவர்: ஸ்ரீ அம்ருத வெங்கடேசர். மூலஸ்தானத்தில் ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவரை கல்யாண வெங்கடேசர் என்றும் அழைப்பர். உற்சவரான ஸ்ரீ அம்ருத வெங்கடேசர் அழகான திருமேனியுடன் சேவை சாதிக்கின்றார். சந்நிதியின் முன்பாக ராசி மண்டலம் இருக்கின்றது. இத்தலத்திலுள்ள காரியசித்தி ஹனுமன் வெகு பிரசித்தம். மிகுந்த வரபிரசாதி. அபய ஹஸ்தமாக ஒரு கரமும், மறு கரத்தில் சௌகந்திகா மலர் கொண்டும் விளங்குகின்றார். குரு வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 1008 ஹனுமன்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. நவகிரகங்கள் தனி சந்நிதி கொண்டுள்ளனர். கொடி மரத்தருகே பல அரிய சுதை வேலைப்பாடுகளை சித்தரித்துள்ளனர். வெண்ணாற்றங்கரை நரசிம்மர் கோவிலில் தொடங்கும் துவாதசி கருடசேவை உற்சவத்தில் ஒவ்வொரு வருஷமும் எழுந்தருளும் 25 பெருமாள்களில் இவரும் ஒருவர். தெற்கு ராஜவீதியில் காளிகா பரமேஸ்வரி கோவிலும் இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.