அருள்மிகு பங்காரு காமாட்சி அம்மன் திருக்கோவில் (தஞ்சாவூர்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரருக்கு திருமண உற்சவம் நடத்த விரும்பிய பிரம்மா, காமாட்சி அன்னையிடம் தன் விருப்பம் நிறைவேற வேண்டினார். தேவியின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தேஜஸ் ஒரு பெண் வடிவம் பெற்றது. அதைப் போன்ற தோற்றத்திலேயே ஸ்வர்ண விக்ரஹம் ஒன்றை வார்த்தனர். அதுவே பங்காரு காமாட்சி. 16ஆம் நூற்றாண்டில் பகைவர்களுக்கு பயந்து இந்த விக்ரஹத்தை, காஞ்சியிலிருந்து எடுத்து வந்தபோது வைக்கோலால் மூடி எடுத்து வந்தனர். வழி மறித்து என்னவென்று கேட்ட வெள்ளையர்களிடம் அம்மை தாக்கியவர் உள்ளே இருப்பதாக கூறி எடுத்து வந்தனராம். பின்னர் கருப்பு சாயம் பூசி ஊர் ஊராக எடுத்து சென்று பாதுகாப்பாக வைத்திருந்தனராம். செஞ்சி, திருச்சி, ஆனக்குடி, திருவாரூர் ஆகிய ஊர்களில் சிறிது காலம் வாசம் செய்துவிட்டு, தஞ்சாவூர் வந்து தனிக் கோவில் கொண்டாள் என ஸ்தல வரலாறு. ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஐஏ (1746 - 1883) சங்கராச்சார்யார் அவர்கள் தஞ்சை மற்றும் குடந்தையில் இருந்த போது காஞ்சி காமாட்சி கோவிலில் இருந்த விக்ரஹத்தை இங்கு எடுத்த வரச் சொன்னதாக குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. அன்னைக்கு தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. சடாரி சாதிக்கும் சம்பிரதாயம் கடைப்பிடிக்கின்றனர். காமாட்சி ஆராதனைக்காக சௌபாக்ய சிந்தாமணி எனும் நூலை துர்வாச மகரிஷி இயற்றியுள்ளார்.
மூலஸ்தானத்தில் ஸ்வர்ண காமாட்சி எனப்படும் ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் அழகே உருவாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். இடக்கையை நளினமாக தொங்கவிட்டு, வலக்கையில் கிளியை ஏந்தியபடி திரிபங்கி நிலையில் தரிசனம் தருகின்றாள். காஞ்சி மஹா பெரியவரின் பிரத்யட்ச தெய்வம். உஷத் காலத்திற்கு முன்பாக மேருவிற்கு அபிஷேகம் செய்கின்றனர். வருடத்தில் 11 முறை காமாட்சி அன்னைக்கு அபிஷேகங்கள். புனுகு சட்டம் சாத்துவார்கள். வாழைநாரினால் தொடுத்த வாசனைப் பூக்கள் மட்டுமே சாத்துகின்றனர். பஞ்ச லோகத்திலான உற்சவ விக்ரஹமாக காமகோடித் தாயார் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். தை மாத கணு நாளன்று உற்சவ காமாட்சியான காமகோடி அம்பாளை சர்வாலங்காரங்களுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். இந்த ஒரு நாள் தவிர மற்ற நாட்களில் உற்சவ மூர்த்தி ஸ்தானத்தை விட்டு நகருவதில்லை. உடைக்காத முழுத் தேங்காய்கள் நைவேத்தியம் செய்விக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.