அருள்மிகு மூலை ஹனுமார் திருக்கோவில், தஞ்சாவூர்

God Name : மூலை ஹனுமார் எனப்படும் பிரதாப வீர ஆஞ்சநேயர்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வித அலங்காரம் செய்கின்றனர்: சித்திரை மாதம் - அமாவாசை தினம் - வெற்றிலை மாலை அலங்காரம்் வைகாசி மாதம் - அமாவாசை தினம் - நவதானிய அலங்காரம்் ஆனி மாதம் - அமாவாசை தினம் - தேங்காய்கள் மாலை (10,080 எண்ணிக்கை)் ஆடி மாதம் - அமாவாசை தினம் - எலுமிச்சம்பழங்கள் மாலை (24,706 எண்ணிக்கை)் ஆவணி மாதம் - அமாவாசை - காய்கறிகள் அலங்காரம்் புரட்டாசி மாதம் - அமாவாசை தினம் - பழங்களால் அலங்காரம்் ஐப்பசி - அமாவாசை தினம் - ஜாங்கிரி அலங்காரம்் கார்த்திகை மாதம் - அமாவாசை தினம் - ஏலக்காய், கிராம்பு அலங்காரம்் மார்கழி மாதம் - அமாவாசை தினம் - மலர்களால் அலங்காரம்் தை மாதம் - அமாவாசை தினம் - வாழைப்பழ மாலை அலங்காரம்் மாசி மாதம் - அமாவாசை தினம் - துளசி மாலை அலங்காரம்் பங்குனி மாதம் - அமாவாசை தினம் - வடை மாலை அலங்காரம்.
மேல ராஜ வீதியும், வடக்கு ராஜ வீதியும் இணையும் வடமேற்கு மூலையில் இருப்பதால் மூலை ஹனுமார் கோவில் என்றே பிரபலம். மூலஸ்தானத்தில் மூலவராக பிரதாப வீர ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். மிகுந்த வரப்பிரசாதி. அழகான திருமேனி. அவருடைய ஹ்ருதய கமலத்தில் ஸ்ரீ ராமர் சூட்சும ரூபத்தில் குடிகொண்டுள்ளார். கிழக்கு பார்த்த சந்நிதி. மண்டபத்து மேல் தளத்தில் 12 ராசிகள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிகளுக்கு கீழே ராசிக்கு உரியவர்கள் நின்று பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். பட்டாபிஷேக ராமர், சீதா தேவி, பாமா - ருக்மணி சகித கிருஷ்ண பரமாத்மா, லட்சுமி நரசிம்மன், சங்கர நாராயணர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வேப்ப மரத்தடியில் எண்ணற்ற நாகப்பிரதிஷ்டைகள். யோக நிலையில் சங்கு - சக்ரதாரியாக சேவை சாதிக்கும் ஆஞ்சநேயரின் சிற்பம் அழகாக உள்ளது. சூரிய - சந்திரர்களை பாம்பு பிடிப்பது போல் (ராகு - கேது) காணப்படும் சிற்பம் எல்லோரையும் கவரும்படி உள்ளது. இதன் கீழ் நின்று பிரார்த்தனை செய்தால் கிரகண தோஷம் விலகும் என கூறுகின்றனர். முகப்பு மண்டபத்தில் பிள்ளையாரையும், முருகனையும் தரிசிக்கலாம். கீதையின் 18 அத்தியாயங்களை நினைவுகூறும் வகையில் 18 கற்றூண்கள் அமைத்துள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.