அருள்மிகு ஆபத்சகாயேச்வரர் திருக்கோவில் (விளாங்குடி)
God Name : ஆபத்சகாயேச்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பஞ்சநதீச்வரரை பூஜிக்கும் 24 அர்ச்சகர்களுள் ஒருவர், சித்திரைத் திருவிழாவின் 5ஆம் நாள் பூஜை செய்யும் முறை கொண்டவர். காசிக்குச் சென்றிருந்த அந்த அர்ச்சகர் அவரது முறை நாளுக்குள் வர இயலவில்லை. வராத அர்ச்சகருக்கு சம்பாவனை தர மறுத்தனர் மற்ற அர்ச்சகர்கள். அர்ச்சகரின் மனைவி பஞ்சநதீச்வரரிடம் முறையிட்டாள். அடுத்த கணம் ஸ்வாமியே, காசிக்குச் சென்றிருந்த அர்ச்சகரின் வடிவம் கொண்டு, காசியிலிருந்து திரும்பி வந்த அடையாளங்களுடன் கோவிலுக்குச் சென்று பஞ்சநதீச்வரரை பூஜித்தார். ஆபத்திற்கு உதவ வந்ததால் ஆபத்சகாயேச்வரர் எனும் திருநாமம் பெற்றார். ஆபத்சகாயரின் தர்மத்திற்குத் துணை வந்த அம்பிகை என்பதால் தர்மாம்பிகை என்று பெயர் பெற்றாள். இந்த நிகழ்வினால் ஐயாறப்பர் கோவிலில் சித்திரை விழாவின் 5ஆம் நாள் ஸ்வாமி தன்னைத் தானே பூஜிக்கும் நடைமுறை உள்ளது.
மூலவர்: ஆபத்சகாயேச்வரர், அம்பாள்: தர்மாம்பிகை. மூலஸ்தானத்தில் ஆபத்சகாயேச்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். தர்மாம்பிகை அம்பாள் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். கோஷ்ட மூர்த்தங்களுள், அமர்ந்த கோலத்திலிருக்கும் துர்க்கை வித்தியாசமாக அழகுடன் காட்சி தருகிறாள். வலச்சுற்றில் பிள்ளையார், சுப்ரமண்யர், சூரியன், பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.