அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில் (திருநெய்த்தானம் - தில்லைஸ்தானம்)
God Name : நெய்யாடியப்பர் எனப்படும் ஸ்ரீகிருதபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு காமதேனுப் பசு பாலாலும், நெய்யாலும் அபிஷேகம் செய்த ஸ்தலம். பசுவின் நெய்யில் ஆடிய அப்பர் என்பதால் நெய்யாடியப்பர் எனும் திருநாமம் கொண்டார்.
பாலுக்குள் நெய்யாக இருக்கும் இறைவனை விளங்க வைப்பதற்காக காமதேனுப் பசு பாலாலும், நெய்யாலும் அபிஷேகம் செய்தது என்பர். நெய்யாடியப்பருக்கு பசுநெய்யால் அபிஷேகம் செய்பவர்கள் எல்லா நலன்களும் பெறுவர்.
சப்தஸ்தான பல்லக்கு விழாவின்போது, திருவையாற்று பெரிய பல்லக்கும், மாப்பிள்ளை பல்லக்கும் திருப்பழனத்து பல்லக்கை அழைத்துக் கொண்டு இவ்வூருக்கு வரும். சோற்றுத்துறை நாதரும், அன்னபூரணியும் இவர்களை எதிர் கொண்டழைத்து வந்து, ஊருக்குள் வலம் வந்து, பின் எல்லோருமாக ஒன்றுசேர்ந்து திருவேதிகுடி செல்வார்கள். இப்படியாக 6 ஊர்களின் பல்லக்குகளும் இங்கு வருவதும், இங்குள்ள நெய்யாடியப்பர் அவர்களை எதிர் கொண்டு அழைப்பதும், பின்னர் எழுவருமாக சேர்ந்து உலா வருவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பக்தர் ஒருவர் தினமும் இவ்வாலயத்திற்கு வந்து ஸ்வாமிக்கு நெய் விளக்கேற்றிவிட்டு, போகும்போது இக்கோவிலில் உள்ள கீரையைப் பறித்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். தொடர்ந்து பல வருடங்கள் இப்படி நடந்ததாம். ஒரு நாள் ஸ்வாமியிடம் சென்று "உனக்கு தினமும் விளக்கேற்றுகிறேனே, எனக்கு ஏதாவது செய்யக் கூடாதா?" என்று கேட்டாராம். "அதுதான் தினமும் கீரையைப் பறித்து செல்கிறாயே" என அசரீரி கேட்டதாம். சிவசொத்துக்கு ஆசைப்படலாகாது என்பதற்காக இந்த நிகழ்ச்சியை நினைவில் கொள்ள வேண்டும்.
தேவாரத்திருத்தலம் - சப்தஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று.
மூலவர்: நெய்யாடியப்பர், அம்பாள்: ஸ்ரீ வாலாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் நெய்யாடியப்பர். உயரமான பாணமும், வட்ட வடிவமான ஆவுடையாரும் கொண்ட அழகிய ஒளி வீசும் தேஜோ மயமான லிங்கம். இவரை கிருதபுரீஸ்வரர் என்றும் அழைப்பர். கிழக்கு பார்த்த சந்நிதி.
தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள ஸ்ரீ வாலாம்பிகை தனி சந்நிதி கொண்டுள்ளார். பாசம், அங்குசம், மற்றும் அபய - ஊரு முத்திரைகள் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனியுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு பாலாம்பிகை, இளமங்கை ஆகிய பெயர்களும் உண்டு.
உற்சவ மூர்த்திகள் அனைத்தும் அழகானவை. பெரிய நடராஜர் சபை. நின்ற கோல தட்சிணாமூர்த்தி வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். நர்த்தன விநாயகர், அனுக்ரஹ பைரவர், காலபைரவர், வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், சப்தஸ்தான ஸ்தலத்து லிங்கங்கள் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.