அருள்மிகு ஸ்ரீ மூலநாதர் திருக்கோவில் (மகாராஜபுரம்)

God Name : ஸ்ரீ மூலநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

மூலவர்: ஸ்ரீ மூலநாதர், அம்பாள்: ஸ்ரீ சிவகாம சுந்தரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ மூலநாதர். ஸ்ரீ சிவகாம சுந்தரி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வலம்புரி விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், தட்சிணாமூர்த்தி மற்றும் கால பைரவர் எழுந்தருளியுள்ளனர். இங்கு கோவில் கொண்டுள்ள கால பைரவர் சுற்று வட்டார மக்களுக்கு குலதெய்வமாக இருந்து ஆசி வழங்குகின்றார். இவ்வூரிலுள்ள பெருமாள் கோவிலில் மூலவராக ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாளும், உற்சவர்களாக ஸ்ரீதேவி - பூதேவி உடனாய வரதராஜப் பெருமாளும் சேவை சாதிக்கின்றனர். சஞ்சீவி மலையுடன் காட்சி தரும் ஆஞ்சநேயர் மிகுந்த வரபிரசாதி என்பர். இவ்வூர் வயலுக்கு நடுவேயுள்ள கிராம தேவதை கோவிலில் பிச்சாயி அம்மன் கிழக்கு நோக்கி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். நடுநிசியில் ஊரை வலம் வந்து காப்பவள். அய்யனார், காத்தவராயன், மதுரை வீரன், சப்த கன்னியர்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். காவிரிக்கரையில் சர்வசித்தி விநாயகர் அமர்ந்து ஆசி வழங்குகின்றார். அதனருகே பிருந்தாவன் மடம் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.