அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் (திருச்சென்னம்பூண்டி)
God Name : சித்தேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த உபரிசரவசு மன்னன், மதம் பிடித்த யானையை அழிக்க எய்த அம்பினால் பயந்து ஓடிய யானை, குளத்தருகே அனுஷ்டானங்கள் செய்து கொண்டிருந்த பிராம்மணனை மிதித்துக் கொன்றுவிட்டது. மீண்டும் அம்பெய்து யானையைக் கொன்றுவிட்டான் மன்னன். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ள கடுந்தவம் மேற்கொண்டான் உபரிசரவசு.
அவன் முன் தோன்றிய சிவபெருமான், "ஓம் பத்மநாபாய நம:" எனும் மந்திரத்தை ஆயிரம் முறை ஜபித்துக் கொண்டும், தினமும் பிராம்மணர்களுக்கு அன்னதானம் செய்து வருமாறும் கூறினார்.
திவ்ய ஞானத்தை கொடுத்ததால், திவ்ய ஞானேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். அவற்றை செய்து முடித்த உபரிசிரவசு, சித்தாச்ரமத்தில் சித்தேஸ்வரருக்கு ஆலயம் ஒன்றை எழுப்பியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
சித்தர்களுக்கு அபயமளிப்பதாலும், சித்தாரண்யத்தில் பல லீலைகளை செய்து கொண்டிருப்பதாலும் சித்தேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். "திருச்சடைமுடி மஹாதேவர்" என கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.
புலவர் பொய்கையாரைச் சேரனுடைய அவையிலிருந்து சோழ அவைக்குப் பெறுவதற்காகப் போர் நடந்த இடம் இது.
சென்னன் (சோழன்) வெற்றி பூண்ட இடம் சென்னம்பூண்டி என அழைக்கப்பட்டு, பின்னர் திருச்சென்னம்பூண்டி என்றானதாகக் குறிப்பொன்று கூறுகிறது.
மூலவர்: சித்தேஸ்வரர், அம்பாள்: சித்தாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சித்தேஸ்வரர். சடைமுடி கொண்டும், ஸ்படிக நிறம் கொண்டும் காட்சி தருகின்றார். அழகிய தோற்றம் கொண்ட சித்தாம்பிகை உடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.