அருள்மிகு வாத்தலை நாச்சியம்மன் திருக்கோவில் (கண்டமங்கலம்)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

காவிரியாற்று வெள்ளப் பெருக்கில் அடித்து வரப்பட்ட அம்மன் சிலை ஒன்று வாத்தலை எனுமிடத்தில் கரை ஒதுங்கியது. வியாபார நிமித்தமாக இவ்வூருக்கு வந்த பூவாளூர் செட்டியார்கள் எடுத்துக் கொண்டு வந்து கண்டமங்கலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர் என ஸ்தல வரலாறு. ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தில் காணிக்கையாக அடிக்கப்படும் மணிகளை, மரமே மெல்ல மெல்ல விழுங்கி, தன்னுள் மறைத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. மணி விழுங்கும் அதிசய மரம் என்றே ஊர்மக்கள் அழைக்கின்றனர்.
மூலஸ்தானத்தில் மூன்று விக்ரகங்கள் உள்ளன. முதன்முதலாக வழிபடப்பட்ட மூலவ விக்ரகமான சாமுண்டீச்வரி, முத்தால ராவத்தர் என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. உக்ரம் அதிகமாக இருந்தபடியால், வராகியை இரண்டாவது மூலவராக ஊர் மக்கள் பிரதிஷ்டை செய்தனர். வராகியும் உக்ரத்துடன் காணப்பட்டதால், மூன்றாவதாக வாத்தலை அம்மனை மூலவராக பிரதிஷ்டை செய்தனர். அருள் வடிவாக காட்சி தரும் வாத்தலை அம்மன், இடது கால் மடித்து, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். அங்குசம், பாசம், உடுக்கை, அன்னக் கிண்ணம் ஏந்திய சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. சூலத்தை ஆயுதமாக தரித்துள்ளார். வலச்சுற்றில் முத்து வழியான், மாமுண்டிக் கருப்பு, மதுரை வீரன், முத்தால ராவத்தரின் திருவுருவம் ஆகியன தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.