அருள்மிகு ஹரிபிரம்மேச்வரர் திருக்கோவில் (நடுக்காவேரி)
God Name : ஹரிபிரம்மேச்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலவர்: ஹரிபிரம்மேச்வரர், அம்பாள்: சௌந்தர்ய நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஹரிபிரம்மேச்வரர். அழகிய சிவலிங்க மூர்த்தம்.
அம்பாள் சௌந்தர்ய நாயகி உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள்.
கணபதி, முருகன், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. மேற்குப் பிரகாரத்தில் சத்யாஷாட மகரிஷி கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார்.
இவ்வூரிலுள்ள பெருமாள் கோவிலில் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் மூலவராகவும், ஸ்ரீதேவி - பூதேவி சஹித ஸ்ரீநிவாசர் உற்சவராகவும் சேவை சாதிக்கின்றனர்.
சத்யாஷாட மகரிஷியின் மூல மூர்த்தி சிவன் கோவிலிலும், உற்சவ மூர்த்தி பெருமாள் கோவிலிலும் உள்ளன.
இவ்வூரிலுள்ள ஸ்மார்த்தர்கள் அனைவரும் சத்யாஷாட சூத்திரத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வோர் ஆவணி அவிட்டத்தன்றும் இவரது சந்நிதியில் பூணூல் மாற்றிக் கொள்கிறார்கள்.
ஆவணி அவிட்டத்தன்று உற்சவ மூர்த்தியின் வீதி உலா நடைபெறும்.
இரட்டைப் பிள்ளையார் கோவிலும், அரவமடக்கியம்மன் கோவிலும் இவ்வூரில் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.