அருள்மிகு திருவானேஸ்வரர் திருக்கோவில் (ரங்கநாதபுரம்)
God Name : கஜாரண்யேச்வரர் எனப்படும் திருவானேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலவர்: திருவானேஸ்வரர், அம்பாள்: காமாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக, கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் கஜாரண்யேச்வரர் எனப்படும் திருவானேஸ்வரர். தென்புறம் நோக்கி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள் அன்னை காமாட்சி.
வலம்புரி விநாயகர் புடைப்பு சிற்பமாகவும், வள்ளி - தெய்வயானை உடனாய சுப்பிரமண்ய ஸ்வாமி, மற்றும் கஜலட்சுமி ஆகியோர் சந்நிதிகளையும் தரிசிக்கலாம். தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிக அழகாக இருக்கின்றது.
கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் ஒன்று. மாடக் கோவிலானதால் கீழ் பிரகாரம் தவிர மேலே மூலஸ்தானத்தைச் சுற்றிலும் ஒரு பிரகாரம் உள்ளது. மூலஸ்தான விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம் எனக் கூறப்படுகிறது.
பூரட்டாதி நட்சத்திர தினத்தன்று, கால பைரவர் ஏழு கிழமைகளைப் படைத்து ஏழு யானைகளின் மீது வைத்து பவனி வந்த ஸ்தலம் என்பதால், பூரட்டாதி நட்சத்திரத்தன்று பிறந்தவர்கள் இத்தலத்தில் வழிபட நற்பயன்கள் கிடைக்குமென்றும் கூறப்படுகிறது.
இவ்வூரிலுள்ள பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி - பூதேவி சகித ஸ்ரீ லட்சுமி நாராயணனையும், ருக்மணி - சத்யபாமா உடனாய கிருஷ்ணனையும் சேவிக்கலாம். இங்குள்ள பஞ்சலோக உற்சவ மூர்த்தி கிருஷ்ணன், கொழு கொழு உடல்வாகு கொண்டு இடக்காலை தூக்கிக் கொண்டு நர்த்தனமாடும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
பழமையான அய்யனார் கோவில் ஒன்றையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.