அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி திருக்கோயில் (திருக்காட்டுப்பள்ளி)

God Name : தீயாடியப்பர் எனப்படும் அக்னீஸ்வரஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

தான் தொட்ட பொருட்களை எல்லாம் சுட்டெரிப்பதால் ஏற்படும் பழி பாவங்கள் நீங்குவதற்காக அக்னி பகவான் இங்கு தன் பெயரில் தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். இறைவன் பிரத்யட்சமாகி அருள் புரிந்தார். இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் பாவங்களையும் போக்கி அருள வேண்டும் என இறைவனிடம் வேண்டினார் அக்னி பகவான். அதன்படி இறைவன் இங்கு கோயில் கொண்டார் என தல வரலாறு கூறுகிறது. இதன் காரணமாக இத்தலத்திற்கு அக்னீஸ்வரம் என்றும், இறைவனுக்கு அக்னீஸ்வரஸ்வாமி என்றும் பெயர்கள் வந்தன. உறையூர் நந்தவனத்திலிருந்து தனக்கு கிடைக்கும் செவ்வந்தி மலர்களை எல்லாம் சிவபெருமானுக்கே சூட்டும் உறையூர் அரசனின் மூத்த மனைவி, உறையூரில் மண்மாரி பொழிந்தபோது திருக்காட்டுப்பள்ளிக்கு வந்துவிட்டாள். அவளுக்காக மனமிரங்கிய சுவாமி, கானல் வெப்பத்தைத் தணித்தருளினார் என்பர்.
மூலவர்: தீயாடியப்பர் எனப்படும் அக்னீஸ்வரஸ்வாமி் அம்பாள்: அழகமர் நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் தீயாடியப்பர். இவருக்கு அக்னீஸ்வரர், அழலாடியப்பர், வன்னிவனநாதர் ஆகிய திருநாமங்களும் உண்டு. தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள அம்பாள் அழகமர் நாயகி பெயருக்கேற்ப அழகான திருவுருவம். இவருக்கு சௌந்தர்ய நாயகி, வார் கொண்டமுலையாள் ஆகிய திருநாமங்களும் உண்டு. நர்த்தன கணபதி, பைரவர், சூரியன், நடராஜர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். செவிகளை சாய்த்து உற்று கேட்கும் பாவனையில் காணப்படும் விநாயகரின் திருவுருவம் அற்புதமானது. இரண்டு பிரகாரங்களிலுள்ள இரண்டு தட்சிணாமூர்த்திகளை ஒரே நேரத்தில் ஒருசேர தரிசிக்கும்படியான அமைப்பில் உள்ளது. இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி சிரசில் சூரிய - சந்திரர்களை தாங்கி, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து, சின் முத்திரை காட்டி, வித்தியாசமான ஆசனமாக அமர்ந்து அழகுடன் காட்சியளிக்கிறார். அனைத்து கிரகங்களும் சூரியனை நோக்கியபடி அமைந்துள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.