மும்மூர்த்திகளின் குடைவரைக் கோவில் (மாமல்லபுரம்)
God Name : சந்திரசேகரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
மாமல்லபுரத்தில் உள்ள பல குடைவரைக் கோவில்கள், குகைக் கோவில்கள், ஒற்றைக்கல் தளி மற்றும் சிற்பக்கூட மண்டபங்கள் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டவை. குறிப்பாக, கடற்கரைக் கோவில் கி.பி. 700-728 இல் ராஜசிம்மன் என்று அழைக்கப்படும் இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவனால் கட்டப்பட்டது.
மாமல்லபுரத்தில் உள்ள குடைவரைக் கோவில்கள், குகைக் கோவில்கள், ஒற்றைக்கல் தளி மற்றும் சிற்பக்கூட மண்டபங்கள் அடங்கிய ஒரு பெரிய வளாகம் இது. கடற்கரைக் கோவில் (ஷோர் டெம்பிள்) கி.பி. 700-728 இல் ராஜசிம்மன் என்று அழைக்கப்படும் இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவனால் கட்டப்பட்டது. இது இரட்டைக் கோபுரக் கோவில். பெரிய கோபுரம் கொண்ட கோவில் கடலைப் பார்த்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதில் 8 பட்டைகள் கொண்ட தாராலிங்கம் கடப்பா கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பாகம் உடைந்துள்ளது. பின்புறமாக பள்ளி கொண்ட பெருமாள் சந்நிதி உள்ளது, இதுவும் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. இதன் நேர்கோடாக வெளியே உள்ள பீடத்தில் சிங்கமும் பலியிடப்பட்ட மானும் காணலாம். சிறிய கோபுரம் கொண்ட கோவிலில் சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. சுற்றிலும் சிதைந்த நந்திகள் மற்றும் பன்றி முகம், யானை உடல், காளையின் கால்கள் கொண்ட விசித்திரமான ஆதிவராகர் சிற்பத்தைக் காணலாம். அருகில் சுவையான தண்ணீர் ஊற்று உள்ளது. காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
அர்ஜுணன் தபஸ்: 30 மீட்டர் உயரமும், 60 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய பாறை ஒன்றில் பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அர்ஜுணன் தபஸ் செய்யும் சிற்பமும் உள்ளது.
மும்மூர்த்திகளின் குடைவரைக் கோவில்: இது திருமூர்த்தி குகை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு பெரிய பாறையில் மேற்கு பார்த்த வாசலுடன் மூன்று குகை போன்ற கருவறைகள் குடையப்பட்டுள்ளன. மையக் குகையில் வழுவழுப்பாகவும், அழகாகவும் செதுக்கப்பட்ட சிவலிங்கத் திருமேனி உள்ளது. பின்புறம் சந்திரசேகர் திருவுருவம் காணலாம். இடது குகையில் முருகப் பெருமான் அபய-ஊரு முத்திரைகளுடன் கூடிய முன்கரங்களும், கெண்டி-அட்சமாலை கொண்ட பின்கரங்களும் கொண்டு யானை மீது அமர்ந்துள்ளார். வலது குகையில் சதுர்புஜங்களுடன் கூடிய திருமால் உள்ளார். தெற்கிலுள்ள மாடத்தில் துர்க்கையை காணலாம்.
ஐந்து ரதங்கள் (பாண்டவ ரதங்கள்): இவை இயற்கையான பாறையை செதுக்கி ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட ரதங்கள். வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் சிங்கம், யானை, மாடு ஆகியனவும், கிழக்கு நோக்கி பன்றியும், மீன் சின்னங்களும் செல்வ செழிப்பை குறிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. இவை வழிபாட்டுத் தலங்களாக இல்லாதிருப்பினும், அரிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவையாகும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.