அருள்மிகு ஸ்ரீ நிவாசப் பெருமாள் திருக்கோவில் (கல்யாணபுரம்)
God Name : ஸ்ரீ நிவாசப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ நிவாசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் உபய நாச்சியாருடன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். கற்பூர ஆரத்தியில் பிரகாசிக்கும் அழகிய திருமேனி. உற்சவ மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. மஹா மண்டபத்தில் அலர்மேல் மங்கைத் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளி தரிசனம் தருகின்றார். பெரிய திருவடியான கருடாழ்வார் மற்றும் சிறிய திருவடியான ஆஞ்சநேயர் ஆகியோரின் திருவுருவங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. பங்குனி சிரவணம் பிரம்மோத்ஸவம், தை சிரவணம் கல்யாண உற்சவம், திருப்பாவாடை உற்சவம் ஆகியன சிறப்புற நடத்தப்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் பவித்ரோத்ஸவம் நடைபெறும். இங்கு பிரார்த்தனையாக கருட சேவை மற்றும் கல்யாண உற்சவங்கள் சேவார்த்திகளுக்காக நடத்தப்படுகின்றன. ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் இந்த கிராமத்திற்கு உஞ்சவிருத்திக்கு வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.