அருள்மிகு சோற்றுத்துறையீசர் திருக்கோவில் (திருச்சோற்றுத்துறை)
God Name : சோற்றுத்துறையீசர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
தல வரலாறு: சப்தஸ்தான தலங்களுள் மூன்றாவது தலம். இந்திரன், சூரியன், கௌதமர் வழிபட்ட தலம். இங்கு ஆஸ்ரமம் அமைத்திருந்த கௌதம மகரிஷி தினமும் இங்கிருந்து திருவையாறு சென்று ஐயாறப்பரை தரிசித்துவிட்டு வருவது வழக்கம். மழை பொய்த்ததால் ஆற்றில் நீர் வரத்துக் குறைந்து விளைச்சல் இன்றி மக்கள் அவதியுற்றனர். இதனால் பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் தங்கள் கஷ்டங்களை கௌதமரிடம் எடுத்துரைத்தனர். மக்களின் குறைகளை இறைவனிடம் சொல்லி பிரார்த்தித்தார் மகரிஷி. இறைவன் உமையன்னையுடன் எழுந்தருளி, அன்னம் தயாரித்து மக்களின் பசியைப் போக்கினார் என தல வரலாறு. இதனால் ஓதனவனேச்வரர் என்ற பெயர் இறைவனுக்கு வந்தது. ஓதனம் என்றால் அன்னம். அருளாளர் எனும் சிவனடியார், மக்கள் பசியால் துடிப்பதைக் காண சகியாது, அனைவர்க்கும் உதவுமாறு இறைவனிடம் மனமுருக வேண்டி பிரார்த்தித்தார். பிரத்யட்சமான இறைவன் உலவா சோற்றுக் கலம் (அட்சய பாத்திரம்) ஒன்றை அருளாளனுக்கு வழங்கினார். அள்ள அள்ளக் குறையாமல் அதிலிருந்து வெளிவந்த உணவை, அனைவர்க்கும் வழங்கி, பசியைப் போக்கினார் என்றும் கூறப்படுவதுண்டு. சப்தஸ்தான பல்லக்கு விழாவின்போது, திருவையாற்று பெரிய பல்லக்கும், மாப்பிள்ளை பல்லக்கும் திருப்பழனத்து பல்லக்கை அழைத்துக் கொண்டு இவ்வூருக்கு வரும். சோற்றுத்துறை நாதரும், அன்னபூரணியும் இவர்களை எதிர்கொண்டழைத்து வந்து, ஊருக்குள் வலம் வந்து, பின் எல்லோருமாக ஒன்று சேர்ந்து திருவேதிகுடி செல்வார்கள். ஊருக்கு தெற்கே சோற்றுடையான் வாய்க்கால் ஓடுகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சோற்றுத்துறையீசர். அழகிய சிவலிங்கம். இவருக்கு ஓதனவனேச்வரர், தொலையாச் செல்வர் போன்ற திருநாமங்களும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி. சுவாமிக்கு தென்புறமாக அம்பாள் அன்னபூரணி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். ஒப்பில்லா அம்மை என்ற பெயரும் உண்டு. விநாயகர், ஆறுமுகன், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, அய்யனார் மற்றும் சப்தஸ்தான தலங்களின் ஏழு சிவலிங்கங்கள் ஆகியவற்றை தரிசிக்கலாம். கௌதமர்-அகலிகை மற்றும் அருளாளத் தம்பதிகளின் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன. தேவாரத் திருத்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.