அருள்மிகு ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்
God Name : ஸ்தல சயனப் பெருமாள்் உற்சவர்: உலகுய்ய நின்றான்
திருக்கழுக்குன்றம் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
பாற்கடல் சென்று க்ஷீராப்திநாதனை வழிபட எண்ணிய புண்டரீக மகரிஷி, அவர் திருவடிகளில் சேர்க்க தாமரை புஷ்பங்களைப் பறித்துக் கொண்டு, பயணத்தை மேற்கொள்கின்றார். அகண்ட சமுத்திரம் வழியை அடைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டு, வழி மறிக்கும் கடலை அப்புறப்படுத்தும் வகையில் தனது கைகளால் வாரி இறைக்கத் தொடங்கினார். கடல் நீரை இறைத்து வழி உண்டாக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் தளரா மனதுடன், நீரை வாரி இறைக்கும் பணியில் ஈடுபட்டார்.
இரவு பகலாகப் பல நாட்கள் கடந்தன. இருப்பினும் சோர்வடையாது நீரை இறைத்துக் கொண்டிருந்தார். வயதான முதியவராக வேடம் பூண்டு எம்பெருமான் மகரிஷி முன்பாக தோன்றினார். புண்டரீக மகரிஷியை அழைத்து தனக்கு பசிக்கிறதென்றும், ஆகாரம் ஏதாவது தருமாறும் வேண்டினார்.
"நான் போய் ஆகாரம் கொண்டு வருகிறேன், அது வரை இந்த கடல் நீரை வாரி இறைத்துக் கொண்டிரும்" என்று கூறி விட்டு, பூக்கூடையை அவரிடம் தந்து விட்டு சென்றார் மகரிஷி.
மகரிஷி சென்றதும், அவர் தந்து விட்டுச் சென்ற மலர்களை தனது மேல் சாற்றிக் கொண்டு, கடல் மணலைக் குவித்து தலைக்கு வைத்துக் கொண்டு, தரையிலே சயனித்து விட்டார் முதியவராக வந்த எம்பெருமான்.
முதியவர் வேடம் களைந்து எம்பெருமானாகவே சயனித்தார்.
யாரை சேவிக்க பயணம் மேற்கொண்டு கடல் நீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தாரோ, அந்த க்ஷீராப்திநாதர் இங்கு சயனித்திருப்பதைப் பார்த்ததும் மகரிஷி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். பின்னர் தாம் சேவித்தபடியே, சேவார்த்திகளும் சேவிக்க ஏதுவாக, இத்தலத்திலேயே இருக்கும்படி வேண்டினார்.
எம்பெருமான் தனது பாம்பணையின்றி தரையில் சயனித்ததால் ஸ்தல சயனப் பெருமாள் எனத் திருநாமம் கொண்டார் என ஸ்தல வரலாறு.
இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: ஸ்தல சயனப் பெருமாள், உற்சவர்: உலகுய்ய நின்றான், தாயார்: நிலமங்கைத் தாயார்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஸ்தல சயனப் பெருமாள் தமது நான்கு திருத்தோள்களுடன் புஜங்க சயனத் திருக்கோலத்தில், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். ஒன்பதடி நீள ஆஜானுபாகுவான ஆகிருதியுடன் தரையில் கிடந்த கோலம்.
மேல் வலது கரம் ஆஹ்வான ஹஸ்தமாக கொண்டுள்ளார். (அதாவது வா என அழைத்து அருள் பாலிக்கும் நிலை). மேல் இடது கரம் சிரசருகே கொண்டுள்ளார். கீழ் இரண்டு கரங்கள் திருவடிகளை நோக்கியுள்ளன. திருவடியை பொற்றாமரை தாங்குகிறது. திருமேனியில் மகரகுண்டலம்.
மூலவரின் திருவடிகளருகே புண்டரீக மகரிஷி கைகூப்பியபடி நிற்கின்றார்.
உற்சவ மூர்த்தியான உலகுய்ய நின்றான் கையில் தாமரை மலருடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் அழகுடன் காணப்படுகின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
நிலமங்கைத் தாயார் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் வரப்ரசாதியாக அருள்பாலிக்கின்றாள். தனிக் கோவில் கொண்டுள்ளார்.
பிரகார வலச்சுற்றில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ராமர் மற்றும் ஆழ்வாராதிகளை சேவிக்கலாம்.
மலை மேலுள்ள கோவிலில் அற்புதமான சிற்பங்களை பார்க்கலாம். மலை மீது வராஹஸ்வாமி கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ வராஹப் பெருமான் வலப்பாகத்தே பூமிபிராட்டியை தாங்கிய வண்ணம், வலது திருக்கரத்தை ஞானோபதேச முத்திரையாக வைத்து தரிசனம் தருகின்றார். இதனை திருவலவெந்தை திருக்கோலம் என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.